CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-02

குசேலன் : யாருக்கு எவ்வளவு மார்க்?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக சூப்பர் ஸ்டார் நடிகராக நடித்து வெளிவந்துள்ள படம் குசேலன். ரஜினிகாந்த், நயன்தாரா, பசுபதி. மீனா, மம்தாமோகன்தாஸ், வடிவேலு, சோனா, லிவிங்ஸ்டன், சின்னி ஜெயந்த், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் என நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதால் சில இடங்களைத் தவிர படம் டாப் கியரில்தான் போகிறது.

சரி... விஷயத்துக்கு வருகிறேன். குசேலன் படத்தின் விமர்சனத்தை பல வலைபதிவர்களும் பலவாரியாக விமர்சித்து விட்டார்கள். இனி விமர்சிப்பதற்கு என்று ஒன்றுமே இல்லை. (போததற்கு ரஜினிகாந்த் வேறு கன்னடர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் அளவுக்கு போய்விட்டார்) இருந்தாலும் குசேலன் விமர்சனம் எமது வலைப்பூவில் இடம்பெற வேண்டுமே...! அதனால்தான் இந்த வித்தியாசமான பதிவு. இதோ குசேலனில் நடித்துள்ள நட்சத்திரங்களுக்கான மதிப்பெண்கள்....

ரஜினிகாந்த் : 50 மார்க் (சூப்பர் ஸ்டார் நடிகராக இயல்பான நடிப்புக்கு)

பசுபதி : 75 மார்க் (உருக்கமான நடிப்பு) (சில இடங்களில் வெயில் படத்தில் பார்த்த பசுபதி போலவே தெரிகிறது)

மீனா : 60 மார்க் (அன்பான காதல் மனைவியாக கணவனுக்கு துணையாக வாழ்க்கையை ஓட்டுவதற்கு)

நயன்தாரா : 35 மார்க் (கவர்ச்சிக்காக மட்டும்தானே பயன்பட்டிருக்கிறார்)

வடிவேலு : 45 மார்க் (முடிக்காக ஆள் கடத்தும் காட்சிக்காகத்தான் இந்த மார்க்)

சோனா : 35 மார்க் (வடிவேலுவுடன் அடிக்கும் லூட்டிக்கும் அந்த உடற்பயிற்ச்சி காட்சிக்காகவும்)

லிவிங்ஸ்டன் : 40 மார்க் (தோன்றும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு மூட்டுவதற்காக)

சந்தானம் : 35 மார்க் (சமையல்காரராக இருந்து கொண்டு தயாரிப்பாளர் என்று கூறி அடிக்கும் லூட்டிக்கு)

எம்.எஸ்.பாஸ்கர் : 35 மார்க் (சில காட்சிகளில் தோன்றி சிரிக்க வைப்பதற்கு)

சின்னி ஜெயந்த் : (ஹி ஹி)

மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால் குசேலனுக்கு 45 மார்க் (நட்புக்கு மரியாதை செலுத்தியிருப்பதால்தான் இந்த மார்க்)

7 comments:

Samuthra Senthil said...

வாசக நண்பர்களே... உங்கள் பார்வையில் குசேலனுக்கு எவ்வளவு மார்க் போடலாம் என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்.

Anonymous said...

surukkamaa sollunga boss.. nalla irukka illaya

வந்தியத்தேவன் said...

உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள் அப்போது பார்த்துவிட்டு என் மார்க்கை போடுகின்றேன். பல்டி ஸ்டார் ரஜனியின் படத்தை தியேட்டரில் போய்ப்பார்க்கவும் வேணுமா?

Anonymous said...

do you think vadivelu deserves that much mark. He is simply not upto the mark.

others characters are like telugu masala cinema characters....not even withstanding to the screenplay....

If u all add into plus, Vasu made them in minus.

No marks to Vasu as he is just continuosly "serving" the tamil cine industry by ONLY dubbing and copying other original movies....no original stuff.

றிசாந்தன் said...

குசேலன் முதல் நாள் முதல் காட்சி பாத்தேன் .
ஒரு நல்ல படத்த இப்பிடியெல்லாம் நாசமாக்க முடியுமா ?
இன்னொரு பாபா . பாபாவைக்கூடஇன்னொருதரம் பாக்கலாம் ஆனா
குசேலன் படத்த ஒருதரம் முழுசா பாத்ததே பெரிய விடயம் .

முரளிகண்ணன் said...

37

Anonymous said...

III:
Kuselan (Rajiji) movie-ku mark podathaan venduma. 1 out of 5 ...so 20 out of 100.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!