நடிகைகளுக்கு பெரும்பாலும் சினிமாத்துறையில் இருந்தும் பெரும் புள்ளிகளிடம் இருந்தும்தான் அதிக அளவிலான டார்ச்சர்கள் வரும். ஆனால் இப்போது கரை வேட்டிக்காரர்களும் டார்ச்சர் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
சமீபத்தில் தமிழகத்தின் முதன்மையானவர் கதையை, இளமையான வேனில் இயக்குனர் சிலை செய்யுற ஆயுதத்தின் ஓசை என்ற பெயரில் படமாக்கினார். அந்த படத்தில் அக்ஷய நடிகையும், சாவ்லா நடிகையும் நடித்திருந்தார்கள். படத்தை கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்க வேண்டும் கட்சித் தலைமையிடம் இருந்து உத்தரவால் சாதாரண தொண்டன் முதல் முக்கிய நிர்வாகி வரை அனைவருமே படத்தை பார்த்து லாபத்தை குவித்து விட்டார்கள்.
இதனால் தயாரிப்பு தரப்பும், இயக்குனர் தரப்பும்.. ஏன்... கதை எழுதிய தரப்பும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படத்தில் நாயகிகளாக நடித்த 2 நடிகைகள் மட்டும் தவியாய் தவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் கரை வேட்டிக்காரர்கள் கொடுக்கும் டார்ச்சர்தானாம். மேற்படி நடிகைகளின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்ட கரை வேட்டிகள்... நான் ஒரு சினிமா எடுக்கப் போகிறேன். நீ தான் ஹீரோயின். நடிக்க நீ ரெடியா? என்று கேட்கிறார்கள். இன்னும் சிலர் எவ்வளவு தந்தால் நீ வருவே? என்று கேவலமான கேள்வியையும் கேட்டுத் தொலைக்கிறார்களாம்.
இதனால் நொந்து போன நடிகைகள் படத்தின் இயக்குனரிடம் சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார்கள். அவரோ... பெரிய இடத்து சமாச்சாரம். என்னால ஒண்ணும் செய்ய முடியாதுன்னு கை விரிச்சிருக்கார். இதனால கீர்த்தமான நடிகை அன் நோன் நம்பரில் இருந்து வந்தால் போனை எடுப்பதையே தவிர்த்து விட்டார். அக்ஷய நடிகையோ இன்னும் ஒரு படி மேலே போய் செல்போன் நம்பரையே மாற்றி விட்டார். (கரை வேட்டிகளை கட்டுப்படுத்துவது யாரு?)
2008-08-19
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இவனுக இம்சை தாங்க முடியல....
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!