CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-22

குசேலன் மீது பேரரசு மறைமுக தாக்கு : ஆடியோ விழாவில் பரபரப்பு


குசேலன் படத்தை டைரக்டர் பேரரசு மறைமுகமாக தாக்கி பேசினார். யாரை காட்டியும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது என்று அவர் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டைரக்டர் வித்யாதரன் இயக்கத்தில் திருமலை தயாரிக்கும் படம் ரசிக்கும் சீமானே. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக டைரக்டர் பேரரசு கலந்து கொண்டு ஆடியோ கேசட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் குசேலன் படத்தையும், ரஜினிகாந்தையும் மறைமுகமாக தாக்கி பேசியதால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விழாவில் பேரரசு பேசியதாவது:
இன்றைய தினம் தமிழ் சினிமாவுக்கு மவுசு கூடியிருக்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளும் பட தயாரிப்பில் இறங்கியுள்ன. ஆனால் ஹீரோக்கள் பற்றிக்குறை அதிக அளவில் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் அவற்றை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காமல் இருக்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வேண்டும்.

நடிகர்களை காட்டி படத்தை ஓட்டிய காலமெல்லாம் போய்விட்டது. இப்போதெல்லாம் ரசிகர்களை யாரும் ஏமாற்ற முடியாது. பெரிய அளவில் விளம்பரங்கள் செய்தும், கோடிகளில் செலவு செய்து படம் தயாரித்தும், யாரைக் காட்டியும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. ரசிகர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். கதை நன்றாக இருந்தால் மட்டுமே படம் பார்க்கிறார்கள். சிறந்த கதையுடன் சிறிய பட்ஜெட்டில் படம் வந்தாலும் அதை பெரிய அளவில் வெற்றி பெற செய்கிறார்கள்.

இவ்வாறு பேரரசு பேசினார்.

சமீபத்தில் வெளியான குசேலன் படம் கோடிக்கணக்கில் செவிட்டு எடுக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக நடிக்கும் படம் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

கிரி said...

நேரம்யா எல்லாம்...பூனைக்கு நேரம் சரி இல்லைனா பூஸ்ட் வேணுமான்னு எலி கேட்குமாம் ..பேரரசு நக்கல் அடிக்கிற அளவுக்கு ஆகி போச்சு எல்லாம் நேரம்

நிருபரே எல்லோரும் உண்மைய மறைக்கறாங்க நீங்களும் இதை செய்யாதீங்க ..ஊர்ல இருக்கிற ஒரு பேப்பர் விடாம வேண்டும் என்றே பிரச்னையை பெரிதாக்குறாங்க Onlyrajini.com ல் ஆதாரத்துடன் பதிவு போட்டு இருக்காங்க

நிருபரே இந்த செய்தியையும் விசாரித்து போடுங்க....

http://thatstamil.oneindia.in/movies/specials/2008/08/22-saimira-to-give-saroja-free-to-compensate-kuselan-loss.html

Tech Shankar said...

செவிட்டு ===> செலவிட்டு

பிழையைத் திருத்திக்கொள்ளவும்.

நன்றி.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!