2008-08-22
விஜயகாந்தின் அடுத்த பட தலைப்பு மரியாதை
கேப்டன் விஜயகாந்த் அடுத்து நடிக்கவுள்ள படத்துக்கு மரியாதை என்ற பெயரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்த் அரசியலில் தீவிராக இறங்கியிருந்தாலும் சினிமாவில் நடிப்பதை கைவிடவில்லை. முன்பை விட வேகவேகமாக படங்களை நடித்து முடித்து விடுகிறார். அவரது எங்கள் ஆசான் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தான் அடுத்து நடிக்கவிருக்கும் மரியாதை என்ற தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த டைட்டிலை வேறொரு நிறுவனம் பதிவு செய்திருந்தது. அந்த நிறுவனத்திடம் இருந்து அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் மரியாதை தலைப்பை பெற்றுள்ளது. கடந்த 2 மாத போராட்டத்துக்கு பிறகே இந்த தலைப்பு கிடைத்ததாக அம்மா கிரியேஷன்ஸ் சிவா தெரிவித்துள்ளார். படத்தில் விஜயகாந்துக்கு இரட்டை வேடமாம். மகன் விஜயகாந்துக்கு மீரா ஜாஸ்மீன் ஜோடியாக நடிக்கிறார். அப்பா விஜயகாந்துக்கு ஜோடியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் அரசியல் வசனங்கள் அதிக அளவில் இருக்கும் என்கிறார்கள்.
Labels:
vijayakanth
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அம்மா கிரியேசன்ஸ் சிவா ஏங்க ஊர் (கோபி) காரர் :-)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!