நடிகர் சுந்தர்சி. தற்போது நடித்து வரும் தீ படத்தில் முழு நிர்வாணத்துடன் நடித்துள்ளார். இது சுந்தருக்கு பெருமை சேர்க்கும் என்று கூறி நடிகை குஷ்பு பெருமிதம் கொள்கிறார்.
இயக்குனராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்தவர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நடிகர் சுந்தர் சி. இவர் ஹீரோ வேஷம் போட்ட மூன்று படங்களும் முதலுக்கு மோசம் இல்லாமல் போயிருக்கிறது. தற்போது அவர் ஸ்ரீமூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தீ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் வெளியாகி ஹிட் ஆன ஆக்ஷன் படத்தில் ரீ.மேக். ஜி.கிச்சா இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் சுந்தர் சி.க்கு நமீதாவும், ராகினியும் ஜேடிகள்.
படத்தின் கதைப்படி நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் சுந்தர்சி., அந்த காக்கிச் சட்டை மூலம் சாதிக்க முடியாததை கதர் சட்டை போட்டு சாதித்து காட்டுகிறார். இதற்காக ஒண்ணுமே இல்லாமல் சென்னைக்கு வருகிறார். ஒண்ணுமே இல்லை என்றால் உடலில் பொட்டுத் துணியில்லாமல் முழு நிர்வாணமாக சென்னைக்கு வருகிறார். அதன் பிறகு அவர் எப்படி கதர் சட்டை அணிகிறார், எப்படி சாதிக்கிறார் என்பதே படத்தின் விறுவிறுப்பான கதையாம்.
முழு நிர்வாணம் குறித்து சுந்தர் சி, கூறுகையில், படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் உடலில் பொட்டுத் துணியில்லாமல் நடித்துள்ளேன். ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் குஷ்புதான் வித்தியாசமான கதை. வித்தியாசமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம்னு ஊக்கப்படுத்தினார். நிர்வாண காட்சியில் நடித்து முடித்து விட்டேன். படம் வந்ததும் எனக்கு மேலும் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும், என்றார். குஷ்புவிடம் தொலைபேசியில் இதுபற்றி கேட்டோம். எனது கணவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவது பெருமையான விஷயம்தானே... என்று பெருமிதத்துடன் பதில் சொன்னார்.
2008-08-20
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய
காசு வருதுனா துணி என்ன எதுவேணா இல்லாம நம்மாளுங்க நடிப்பாங்கப்பு! போட்டு தாக்கரதுகுள்ளே சுதாரிச்சு ஓடிடுடப்பு!
தேவைப் பட்டதால் ஸ்ரீதேவி,மாதவி,ஸ்ரீபிரியா,நளினி(பழைய).....
லிருந்து இன்னிக்கு உள்ள கடைசியா வந்த பேர் (எனக்கு) தெரியாத நடிகை வரைக்கும் உள்ள நிர்வாணப் படம் என்னுடைய கதைக்குத் தேவைப் படுது குஷ்பூ அனுப்புவாரா? ஹி...ஹி...
ஜொள்ளுசாமி!....
சத்தியமா நான் இல்லை ஜொள்ளுசாமிதான் கேட்கிறார்! :)
தமது தகுதிக்கும் தரத்திற்கும் ஏற்ப எது பெருமை சேர்க்கும் என்று கருதுகிறார்களோ அது குறித்து அவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.
தவறென்ன ?
அன்புடன்
முத்து
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!