நடிகர் விஜய்யால் சின்ன அசின் என்று புகழப்பட்ட இளம் நடிகை பூர்ணா கன்னட மொழி திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் பரத்துடன் ஜோடியாக அறிமுகமானவர் பூர்ணா. தமிழ்சினிமாவுக்கு ஏற்ற கிராமத்து முகவமைப்புடன் இருக்கும் இவர் முதலில் கமிட் ஆன படம் கொடைக்கானல். ஆனால் அதற்கு பிறகு கமிட் ஆன முனியாண்டி படம் முதலில் ரீலிஸ் ஆகி விட்டது. கொடைக்கானல் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. முனியாண்டி படம் எதிர்பார்த்த அளவு போகாவிட்டாலும் நடிகை பூர்ணாவின் வீட்டு வாசலை ஏராளமான தமிழ் சினிமா வாய்ப்புகள் தட்டின.
ஆனால் அம்மணியோ.. நான் எதிர்பார்த்தபடி கதை அமையவில்லை. அதனால் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்று கூறி வந்தார். இந்நிலையில் பூர்ணா தமிழில் இருந்து கன்னட மொழிக்கு தாவியிருக்கிறார். கன்னட டைரக்டர் சிவமணி இயக்கி வரும் ஜோஸ் என்ற படத்தில் பூர்ணாதான் ஹீரோயின். பள்ளி மாணவியாகவும், மருத்துவக்கல்லூரி மாணவியாகவும் பூர்ணா நடிக்கிறார். ஜோஸ் படத்தின் கதை எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் ஒப்புக் கொண்டேன். தமிழிலும் இதுபோல நல்ல படங்கள் அமைந்தால் நடிப்பேன் என்கிறார் பூர்ணா.
2008-08-11
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!