சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த நடிகை நமீதாவிடம் ரசிகர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கே. சினிமா என்ற புதிய நிறுவனம் தயாரிப்பில், டைரக்டர் திருஞானம் இயக்கும் படம் அழகான பொண்ணுதான். இந்த படத்தில் நமீதாதான் கதாநாயகி. அவருடன் புதுமுக நாயகன் நடிக்கிறார். வாளமீனுக்கும்... பாடலுக்கு இசையமைத்த சுந்தர் சி.பாபு இந்த படத்துக்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.
இந்த படத்தில் சூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த சூட்டிங்கில் புதுமுக நடிகருடன், நடிகை நமீதா ஆடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. நமீதா வந்திருப்பதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடி விட்டனர். சூட்டிங் இடைவேளையில் உணர்ச்சிவசப்பட்ட சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் நமீதாவை உரசிப் பார்த்தனர். ரசிகர்களின் சில்மிஷத்தால் மிரண்டு போன நமீதா, இயக்குனரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதையடுத்து அந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் வந்து கூட்டத்தை கலைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
2008-08-11
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே..!
:-)))))))))))
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!