CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-19

குசேலன் நஷ்டம் எவ்வளவு? தியேட்டர் உரிமையாளர்கள் பேட்டி

Rajinikanth in kuselan
குசேலன் படத்தால் ரூ.40 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறியியுள்ளனர். இந்த தொகையை திருப்பித் தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடித்த படம் குசேலன். மலையாளத்தில் வெளியான கத பறயும்போள் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தை கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம¢ இணைந்து தயாரித்தது. டைரக்டர் பி.வா.சு இயக்கினார். இந்த படம் ஆகஸ்ட் 1-ம் தேதி திரைக¢கு வந்தது. ரஜினி படம் என்பதால் அதிக விலை கொடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வாங்கினர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் தமிழகம் முழுவதிலிருந்தும் தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குசேலன் ரீலிஸ் நேரத்தில் ரஜினிகாந்த் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால்தான் படத்தை பார்க்க ரசிகர்கள் வரவில்லை என்று கூறப்பட்டது. ரஜினிகாந்த் குறைவான நேரத்தில் வருவதாலும் ரசிகர்களிடையே வரவேற்பு இல்லை என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் குசேலன் படத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டம் எவ்வளவு என்பது குறித்து தமிழ்நாடு திரைப்பட தியே¬¬ர் அதிபர்கள் சங்கத்தினர் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார்கள். சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மற்றும் தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் பழனியப்பன், செயலாளர் பி. கண்ணப்பன், பொருளாளர் ஆர். சுந்தர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

குசேலன் படத்தில் எனது பங்கு 25 சதவீதம்தான் என ரஜினி கூறினார். ஆனால் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரும் நேரத்தில், இது ரஜினி படம், அவர் படம் முழுக்க வருகிறார் என இயக்குனர் வாசு தெரிவித்தார். படத்தை திரையிட நாங்கள் வாங்கும்போதும் வாசு இதையே கூறினார். அதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கினோம். தமிழகம் முழுவதும் 375 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. பெரிய தியேட்டருக்கு ரூ. 30 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் வரையும் சிறு தியேட¢டருக்கு ரூ. 15 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சம் வரையும் கொடுத்து படத்தை வாங்கினோம். இப்போது இந்த தியேட்டர்களில் மொத்தமாக ரூ. 40 கோடிக்கு எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரஜினி நடித்த படங்களிலேயே பெரிய அளவில் தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருப¢பது குசேலன் படம்தான். பாபா கூட இந்த அளவுக¢கு நஷ்டத்தை தரவில்லை. அதுக்கே ரஜினி எங்களுக்கு பணத்தை திருப்பி தந்தார். இம்முறை பல தியேட்டர் அதிபர்களுக்கு 90 சதவீதமும் சிலருக்கு 60 சதவீதமும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டும். ரஜினி தலையிட்டால் மட்டுமே இது நடக்கும். எனவே அவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.

படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம், இது ரஜினி படம் இல்லை என்பதுதான். ரஜினி படத்துக்கு பல நாட்கள் தியேட்டரில் டிக்கெட் கிடைக்காது. இப்படம் திரைக்கு வந்த இரண்டாவது நாளிலேயே தியேட்டர்கள் காலியாக இருந்தன. படத்துக்கான நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் தயாரிக்கும் படங்களுக¢கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 23ம் தேதி சென்னையில் அனைத்து தியேட்டர் அதிபர்களும் கலந்து ஆலோசிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 comments:

கிரி said...

90% நஷ்டம் என்று இவர்கள் கூறுவது நம்பும் படி இல்லை.

R.Gopi said...

Actually Pyramid Saimira said that Kuselan has collected 45 crores in 10 days. Then how come 90% loss and all. There is something fishy as these greedy people will say anything in want of money and also know that Rajni will always be helpful to these people when they cry about such losses.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!