அம்முவாகிய நான் படத்தில் விலைமாதுவாக வந்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை தொட்டுச் சென்றவர் பாரதி. கல்யாணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று அம்மு பாரதி தெரிவித்ததாக கடந்த மாதம் பத்திரிகைகளில் செய்தி வெளியாகின. இதற்கிடையில் தனது உறவினர் ஒருவரை பாரதி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு தேனிலவையும் முடித்துக் கொண்டு மீண்டும் கோடம்பாக்கம் திரும்பியிருக்கிறார் பாரதி. என்ன ஏதுவென்று விசாரித்தால்... நான் சினிமாவில் தொடர்ந்து நடிக்கப் போகிறேன் என்று அசத்தலான பதிலை தருகிறார். திருமணத்துக்கு பிறகு நான் நடிக்க மாட்டேன் என்று சிலர் வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்று பாரதி கூறுகிறார்.
ஆனால் காதல் கணவர், பாரதியின் நடிப்பு சேவைக்கு சம்மதித்ததால்தான் இந்த மனமாற்றம் என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள். எது உண்மையோ? மீண்டும் பாரதி நடிக்க வந்தால் சரிதான் என்கிறீர்களா?
2008-08-18
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!