2008-06-15
நடிகர் எஸ்.ஜே.சூர்யா மருத்துவமனையில் அனுமதி
இரட்டை அர்த்த வசனங்களால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தற்போது நியூட்டனின் மூன்றாம் விதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எஸ்.ஜே.யின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சூர்யாவை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள லைப் லைன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு எஸ்.ஜே.சூர்யாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் 15 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி தெரிவித்து விட்டனர். இதையடுத்து சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
Labels:
s j surya
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நிருபர் வலைப்பூவில் வெளியாகும் செய்திகள் பற்றிய உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
என்னவே... எங்க மாவட்டத்துக்காரருக்கு காயமுன்னு போட்டுருக்கீரு. அவரு இப்ப எப்டிவே இருக்காரு. சூர்யா திருநெல்வேலி மாவட்டத்துக்கே செல்லப்பிள்ளை வே. அவரு எப்டி இருக்காருன்னு கேட்டுட்டு வந்து ஒரு பதிவ போடும் வே.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!