CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-25

Asin தெரியும்... சின்ன அசினை தெரியுமா?


தலைப்பை பார்த்ததும் குட்டி ராதிகா போல் சின்ன அசின் என்ற பெயரில் யாராவது புது நடிகை வந்து விட்டாரோ? என்று நினைத்து விடாதீர்கள்.

டைரக்டர் திருமுருகன் தற்போது எடுத்து வரும் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் நாயகன் பரத்துடன் ஜோடி சேர்ந்துள்ள புதுமுக நடிகை பூர்ணாவைத்தான் இப்படி எல்லோரும் அழைக்கிறார்கள். ஒரு சிலர் இவரை அசினின் ஐம்பது காசு ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிறார் என்று வர்ணிக்கிறார்கள்.

சமீபத்தில் முனியாண்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய்யும், பூர்ணாவை சின்ன அசின் என்று வர்ணித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார். இந்த பட்டம் குறித்து புதுமுக நடிகை பூர்ணா கூறுகையில், எனக்கு அசினை ரொம்ப பிடிக்கும். என்னை விஜய் சாரே சின்ன அசின்னு சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முனியாண்டி படத்தில் நான் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறேன். கலகலப்புக்கு பஞ்சமிருக்‌காது. படம் வந்ததும் பார்த்துட்டு, நான் அசின் அளவுக்கு இல்லன்னாலும் எப்படி நடிச்சிருக்கிறேன்னு சொல்லுங்க, என்றார் கொஞ்சும் குரலுடன்.

5 comments:

Samuthra Senthil said...

சின்ன அசின் குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...!

Sen22 said...

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் உங்களையும் அன்புடன் வரவேற்கிறது...


Photo Superuuuu...

Anonymous said...

பாத்தா கோபிகா சாயல் தெரியுது.

அசின் மாதிரியா தெரியுது எல்லாருக்கு?

Samuthra Senthil said...

//Sen22 said...
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் உங்களையும் அன்புடன் வரவேற்கிறது...


Photo Superuuuu...
//

நன்றி Sen22

Anonymous said...

//துப்பறியும் நிருபர் said...

பாத்தா கோபிகா சாயல் தெரியுது.

அசின் மாதிரியா தெரியுது எல்லாருக்கு?//

UNGALUKKI KANNU THERIYAATHA?

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!