2008-06-24
செக்ஸ் புகார் : மாளவிகாவுக்கு படஅதிபர் கெடு
தவறாக நடக்க முயன்றார் என்று பட அதிபர் மீது செக்ஸ் புகார் கூறிய மாளவிகாடுவுக்கு ஜூலை 1ம்தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
நடிகை மாளவிகா தற்போது கார்த்தீகை என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கும் மாளவிகா இயக்குனரி்ன் கோரிக்கையை ஏற்று நடிக்க வந்தார். அப்போது பட அதிபர் ஆஞ்சநேயலு தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று மாளவிகா புகார் கூறினார். இதுதொடர்பாக நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் தெரிவித்த மாளவிகா, இனி குழந்தை பிறந்த பிறகுதான் அந்த படத்தில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மாளவிகாவுக்கு வரும் 1ம் தேதி வரை கெடு விதிப்பதாக படஅதிபர் ஆஞ்சநேயலு கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், கார்த்தீகை படத்தில் இன்னும் பதினைந்து நாட்கள் மாளவிகா நடித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், மாளவிகா, குழந்தை பிறந்தபிறகே நடிப்பேன் என்கிறார். இதனால் படத்தி்ற்கு முதலீடு செய்த நான்கு கோடி, கேள்விக்குறியாகியுள்ளது. மாளவிகாவை படத்திலிருந்து நீக்கிவிட்டு வேறு நடிகையை நடிக்க வைக்கலாம் என்றால், ஏற்கனவே எடுத்த காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டும் எப்படிப் பார்த்தாலும் நஷ்டம் முக்கால் கோடியை தாண்டிவிடும். எனவே வரும் ஜூலை 1ம் தேதிக்குள் மாளவிகா மீண்டும் நடிக்க வரவேண்டும். இல்லையேல் அவர்மீது இரு வழக்குகள் தொடரப்படும், என்றார்.
தன் மீது பொய் புகார் கூறியதற்கு ஒரு மானநஷ்ட வழக்கும், படத்திற்கு ஏற்பட்ட பொருளிழப்புக்கு ஒரு நஷ்டஈடு வழக்கும் என இரண்டு வழக்குகள் போடப்படும் என்று ஆஞ்சநேயலு கூறியிருக்கிறார்.
இதுபற்றி மாளவிகாவிடம் கேட்டதற்கு, அவர் வழக்கு தொடர்ந்தால் சட்டரீதியாக வழக்கை சந்திப்பேன், என்றார். அதேநேரத்தில் மாளவிகாவிடம் சமாதானம் பேசவும் சில மூத்த நடிகர்கள் முயன்று வருகிறார்கள்.
இந்த விஷயத்தில் மாளவிகா சமாதானமாக செல்ல வேண்டுமா, இல்லை வழக்கு சண்டை போடலாமா என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் வாசகர்களே...!
Labels:
Malavika
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
செக்ஸ் டார்ச்சர் குறித்த மாளவிகா பேட்டியை படிக்க இங்க சொடுக்குங்கள்.
கோர்ட்டு கேஸூன்னு போறத விட சமாதானமா போறதுதான் நல்லதுன்னு தோனுது நிருபர்.
கொடுமையா இருக்கே. வழக்கு கண்டுப்பா போடனும்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!