CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-28

நமீதாவை பார்த்து மிரண்டு ஓடிய இயக்குனர்



நமீதாவின் பிரம்மாண்ட படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள் மத்தியில், நமீதா கேட்ட சம்பளத்தை பார்த்து மிரண்டு ஒடியுள்ளார் இயக்குனர் ஒருவர்.

நடிகை மாளவிகா கார்த்தீகை என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் சூட்டிங்கில் படத்தின் தயாரிப்பார் ஆஞ்சநேயலு தன்னிடம் தவறாக நடக்க முயன்றார். செக்ஸ் டார்ச்சர் செய்தார் என்று அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்ததும், இதையடுத்து அவரை படத்தில் இருந்து நீக்கியதும் தெரிந்த சங்கதிதான்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கார்த்தீகை படத்தில் மாளவிகா இடத்தில் நமீதாவை நடிப்பார் என்று கூறப்பட்டது. படத்தின் டைரக்டரும் இதனை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து டைரக்டர் மற்றும் கார்த்தீகை பட குழுவினர் நடிகை நமீதாவிடம் இதுபற்றி பேசுவதற்காக சென்றனர். அப்போது நமீதா பேசிய பேச்சை கேட்டு அங்கிருந்த அனைவருமே அப்செட் ஆகி விட்டார்களாம்.

அப்படி என்ன பேசினார் நமீதா? இன்னொரு நடிகை நடித்த கேரக்டர்... அவர் நடிக்க முடியாது என்று சொன்னதால் என்னிடம் வந்திருக்கிறீர்கள். ரூ.30 லட்சம் சம்பளமாக தந்தால் படத்தில் நடிக்கிறேன், என்று தடாலடியாக சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளார் நமீதா. சரி... தயாரிப்பாளரிடம் பேசிவிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு கார்த்தீகை குழுவினர் ஓட்டம் பிடித்து வந்து விட்டார்களாம். இப்போது வேறு நடிகை யாராவது சிக்குவார்களா? என்று தேடி வருவதாக தகவல்.

2 comments:

Samuthra Senthil said...

நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

Namithava Ippadi? Namba mudiya villai...

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!