CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-08

நடிகர் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள சங்க கட்டடத்தில் இன்று காலை நடந்தது. சங்கத்தின் தலைவர் நடிகர் சரத்குமார் தலைமை தாங்கினார். ‌பொதுச்செயலாளர் ராதாரவி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர்கள் மனோரமா, விஜயகுமார் உள்பட நடிகர், நடிகைகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழ் சினிமாவில் நடிக்கும் புதிய நடிகர்கள் வரும் 30ம் தேதிக்கும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து கொள்ள வேண்டும், நடிகர் நடிகைகள் தங்களது சம்பளத்தில் 2.5 சதவிதத்தை நடிகர் சங்கத்துக்கு வழங்குவது, செவாலியே சிவாஜிகணேசனுக்கு சென்னை நகருக்குள் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசிடம் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பின்னர் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் பேசுகையில், தற்போது சிவாஜிக்கு அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் எங்கோ ஒரு மூலையில் இருப்பது போல உள்ளது. அவருக்கு சென்னை நகருக்குள் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!