CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-10

திட்டமிட்டபடி தசாவதாரம் ரீலிஸ் : ஆஸ்கார் தகவல்


தசாவதாரம் பட வெளியீடு தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பீலால் தசாவதாரம் ரீலிஸ் தடைப‌டாது. திட்டமிட்டபடி படம் ரீலிஸ் ஆகும் என்று ஆஸ்கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் பத்து வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ள படம் தசாவதாரம். இந்த படம் பல்வேறு வழக்குகள், பிரச்னைகள், சர்ச்சைகளை கடந்து வரும் 13ம் தேதி ரீலிஸ் ஆகவிருக்கிறது. தசாவதாரம் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து படத்தை ரீலிஸ் செய்வதற்கான வேலைகளில் ஆஸ்கார் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தசாவதாரம் பட வெளியீடு தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர், பக்தவச்சலம் ஆகியோர் இந்த அப்பீல் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில், தசாவதாரம் படம் இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது. சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையிலான மோதலை சித்தரிப்பதாக இந்தப் படம் அமைந்துள்ளது. இது ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வுகளை, குறிப்பாக 50 கோடி வைணவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது. இந்தப் படத்தை திரையிட அனுமதித்தால் நாட்டில் சட்டம், ஓழுங்கு பிரச்சினை உருவாகும். எனவே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையேயான மோதலை சித்தரிக்கும் காட்சிகளையும், மத உணர்வுகளை புண்படுத்தும் வேறு சில காட்சிகளையும் நீக்க உத்தரவிட வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து தசாவதாரம் திட்டமிட்டபடி 13ம்தேதி ரீலிஸ் ஆகுமா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் திரையலகத்துக்கே ஏற்பட்டது. இதுபற்றி திரையுலகை சேர்ந்த பலரும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு போன் செய்து விசாரித்தபடி இருக்கிறார்கள். ஆஸ்கார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நம்மிடம் கூறுகையில், தசாவதாரம் படம் ரீலிஸ் தேதியில் மாற்றம் இருக்காது. நாங்கள் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். சுப்ரீம் கோர்‌ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவால் தசாவதாரத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் ஹேபியஸ் தாக்கல் செய்திருப்பதால் தடை விதிக்க முடியாது. எனவே ரசிகர்கள் 13ம் தேதி தசாவதாரத்தை தரிசிப்பதில் சிக்கல் இல்லை, என்றார்கள்.

1 comments:

முரளிகண்ணன் said...

அப்பாடி வயத்துல பால வார்த்தீங்க

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!