2008-06-16
ரோபோவில் ப்ரியாமணி? : புது தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குசேலன் படத்துக்கு பிறகு நடிக்கவுள்ள படம் ரோபோ. இந்த படத்தை இயக்குபவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். சிவாஜி படத்தில் ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
ரோபோவில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் நடிகை ப்ரியாமணியும் ரோபோவில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கப்போகிறார் என்ற செய்தி கோலிவுட்டை கலக்கி வருகிறது.
பருத்தி வீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு ஏராளமானவர்கள் போனில் வாழ்த்து தெரிவித்தனர். ரோலோ லொகேஷனுக்காக வெளிநாடு சென்றுள்ள டைரக்டர் ஷங்கரும் ப்ரியாமணிக்கு தந்தி மூலம் வாழ்த்து செய்தி அனுப்பினார். அதில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து வந்ததும், உங்களை சந்திக்கிறேன் என்றும் கூறப்பட்டுள்ளதாம். இதையடுத்து ரோபோவில் ப்ரியாமணியும் நடிப்பார் என்று பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
நடிகை ப்ரியாமணி, தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு மறுநாளே செல்போன் எண்ணை மாற்றி விட்டார். எனவே அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எல்லாம் ரோபோவில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் செய்யம் மாயமோ என்னவோ?
Labels:
Priyamani
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
I'm thankful with your blog it is very useful to me.
//ரோபோவில் ப்ரியாமணியும் நடிப்பார் என்று பரபரப்பு கிளம்பியுள்ளது//
Kilampirucha...?
good news,it will add effect to the movie
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!