CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-17

திருட்டுப்பயலே பாணியில் மாளவிகா மிரட்டல்


சம்பள விவகாரத்தில் நடிகை மாளவிகா மற்றும் அவரது மேனேஜர் இடையே மோதல் முற்றுகிறது.

சமீபத்தில் வெளியான சிங்கக்குட்டி படத்தில் நடிப்பதற்காக மாளவிகாவுக்கு ரூ. 4 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது. இதில் ரூ.1 லட்சத்தை கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதி 3 லட்சத்தைத்தான் மேனேஜர் முனுசாமி என்னிடம் கொடுத்தார். இதுபற்றி கேட்டால் என்னை பீல்டை விட்டே விரட்டி விடுவேன் என்று மிரட்டுகிறார் என்று மாளவிகா நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுபற்றி நடிகர் சங்க நிர்வாகிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் புகாரில் சம்பந்தப்பட்ட மேனேஜரும் தன் பங்குக்கு ஒரு புகார் மனுவை நடிகர் சங்கத்தில் கொடுத்துள்ளார். அதில் மாளவிகாதான் என்னை மிரட்டுகிறார். சம்பளம் குறித்து பேசுவதற்காக அவரை அழைத்தேன். ஆனால் அவர் என்னை ஆள் வைத்து மிரட்டுகிறார், என்று கூறியுள்ளார். மேலும் மேனேஜர் முனுசாமி இதுதொடர்பாக நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் நேரில் சென்று விளக்கம் அளித்து விட்டாராம். திருட்டுப்பயலே படத்தில் ஆள் வைத்து மிரட்டுவது போல மாளவிகா மிரட்டுகிறார் என்கிறார் மேனேஜர் முனுசாமி.

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி புகார் கொடு்த்திருப்பதால் குழப்பத்தில் இருக்கிறது நடிகர் சங்கம்.

மாளவிகா கொடுத்த பரபரப்பு புகார் பற்றிய செய்தியை படிக்க இங்கே சொடுக்கவும்.

4 comments:

Samuthra Senthil said...

இந்தி செய்தி பற்றியும், நிருபர் வலைப்பூவில் வெளியாகும் செய்திகள் பற்றிய உங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் வாசகர்களே...!

கிரி said...

எங்க மேலேயே தப்பு இருந்தாலும்..நாங்க முனுசாமிய தான் கட்டம் கட்டுவோம்..:-)))

Samuthra Senthil said...

//கிரி said...
எங்க மேலேயே தப்பு இருந்தாலும்..நாங்க முனுசாமிய தான் கட்டம் கட்டுவோம்..:-)))//

கட்டுங்க... கட்டுங்க... நல்லா கட்டுங்க...!

Anonymous said...

//நாங்க முனுசாமிய தான் கட்டம் கட்டுவோம்..:-)))////

நான் இதை ஆமோதிக்கிறேன்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!