
ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடிகை நவ்யா நாயர் அறக்கட்டளை ஒன்றை துவங்கவிருக்கிறார். தான் சம்பாதிக்கும் பணத்தில் சிறு தொகையையாவது இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ள நடிகை நவ்யா நாயருக்கு, கடந்த பல ஆண்டுகளாகவே அறக்கட்டளை தொடங்கும் எண்ணம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் தற்போது அதற்கான வேலைகளை முடுக்கி விட்டிருப்பதாக கூறுகிறார் நவ்யா. இவர் ஏற்கனவே கேரளாவில் ஓணம் மற்றும் விஷ§ பண்டிகை காலங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் வரும் நிதியை கேரளாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!