2008-06-18
தசாவதாரத்தால் டாப்புக்கு சென்ற அசின்
தசாவதாரம் வந்து கமல்ஹாசனுக்கு பெயர் வாங்கிக் கொடுத்ததோ இல்லையோ, அசினை டாப் லெவலுக்கு கொன்டு சென்றுள்ளது. இது கோலிவுட்டில் இல்லை... பாலிவுட்டில். தசாவதாரம் படத்தில் அசின் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இதில் குறைந்த நேரத்தில் வந்தாலும் நம்பியின் மனைவியாக வந்த கேரக்டர் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது. தற்போது கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வரும் அசின் அடுத்து தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. இதற்கிடையில் இந்தி தசாவதாரத்தை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அசினை பாராட்டி நேரடியாக வரவழைத்து விட்டாராம். இதனால் தலைகால் புரியாமல் இருக்கிறார் அசின்.
அமிதாப்பே என் நடிப்பை பாராட்டி விட்டார் என்று சொல்லி வரும் அசினைத் தேடி பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. இருப்பினும் ஆரம்பத்திலேயே கால்ஷீட் சொதப்பல் ஆகிவிடக் கூடாது என்பதால் தற்போது சல்மான்கானுடன் ஒருபடம், அக்ஷய் குமாருடன் ஒருபடம் என்று இரண்டு படங்களில் மட்டுமே ஒப்பந்தமாகியிருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நிருபர் வலைப்பூவின் செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டு செல்லுங்கள் வாசகர்களே...!
அசின் அவருடைய இளந்தொப்பையை மட்டும் சரி செய்துவிட்டால் அவரை அடிச்சிக்க ஆளில்லை. தசாவாதாரத்தில் படம் முழுக்க ஓடிய ஓட்டத்தால் அதைக் கரைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!