
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் குசேலன் படத்தில் இறுதிகட்ட சூட்டிங் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள புன்னமாதா ஏரிப்பகுதியில் சூட்டிங் நடந்தபோதுதான் எதிர்பாராத விதமாக விபத்து நடந்துள்ளது. ஏரியின் கரையில் சூட்டிங் நடந்தபோது, டைரக்டர் பி.வாசு, ஏரியில் ஒரு படகில் இருந்தவாறு காட்சிகளை இயக்கிக் கொண்டிருந்தார். இன்னொரு நாட்டுப் படகில் கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கேமரா மேன் அரவிந்த் படகில் இருந்து கீழே விழுந்தார்.
இதனால் படப்பிடிப்பில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேமராமேன் அரவிந்த் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக குசேலன் சூட்டிங் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
1 comments:
Such a nice blog. I hope you will create another post like this.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!