2008-06-19
செக்ஸ் புகார் : மிருகம் சாமிக்கு அடுத்த சிக்கல்
நடிகை பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்தது, செக்ஸ் டார்ச்சர் புகாரில் சிக்கியது, படம் எடுக்க ஓராண்டு தடை என்று அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்த மிருகம் பட இயக்குனர் சாமிக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்து விட்டது.
டைரக்டர் சாமிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது என கருதி, சரித்திரம் என்ற படத்தை இயக்க முனைப்புடன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நடிகர் சங்கம் விதித்த தடை அடுத்த மாதம் வரை நீடிக்கிறது என்பதால் தற்போது படத்தை துவங்க முடியாத சிக்கலில் சிக்கியிருக்கிறார் சாமி. சரித்திரம் படத்தில் மிருகம் நாயகன் ஆதி, நடிகர் ராஜ்கிரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஆதிக்கு ஜோடியாக கருப்பசாமி குத்தகைதாரர் நாயகி மீனாட்சியை ஒப்பந்தம் செய்திருந்தனர்.
இதற்கிடையில் சரித்திரம் படப்பிடிப்பு தொடங்க மேலும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் என்பதால் மீனாட்சி நைசாக நழுவி விட்டாராம். தற்போது அவர் சுந்தர்சியுடன் பெருமாள், பசுபதியுடன் த.நா.07 அல 4777 ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில படங்கள் மீனாட்சியை தேடி வந்ததுதான் இந்தி முடிவுக்கு காரணம் என்கிறார்கள். அடுத்தடுத்து வரும் சிக்கல்களால் குழப்பத்தில் இருக்கிறார் சாமி.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நிருபர் வலைப்பூவில் வெளியாகும் செய்திகள் பற்றிய உங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் வாசகர்களே...!
எல்லாம் சரி. பின்னூட்டமிட தனி பாப் அப் விண்டோ திறப்பது பின்னூட்டமிடுவதற்கு சிரமமாக உள்ளது. தயவு செய்து மாற்றவும் :((
//பின்னூட்டமிட தனி பாப் அப் விண்டோ திறப்பது பின்னூட்டமிடுவதற்கு சிரமமாக உள்ளது. தயவு செய்து மாற்றவும் :((//
பின்னூட்டத்துக்கு நன்றி சென்ஷி... தாங்கள் சொல்வது போல மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. கண்டிப்பாக மாற்றி விடுகிறேன்.
குறி்ப்பு : நண்பர் சென்ஷி சொல்வதுபோல பின்னூட்டத்துக்கு தனி பாப்அப் விண்டோ திறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தெரிந்தவர்கள் யாராவது எனக்கு பதில் சொல்லுங்களேன்...!
ப்ளாக்கர் அக்கவுண்ட்ல செட்டிங்க்ஸ் செலக்ட் செஞ்சு அதுல கமெண்ட்ஸ் கிளிக் செஞ்சு அதுல கீழ show comments in a pop up window ன்ன்னு இருக்கும் அதுல யெஸ்ஸுன்னு க்ளிக் ஆகியிருக்கறதா நோ வா மாத்துங்க. வேலை ஈஸி :)
நன்றி சென்ஷி... தங்களது ஆலோசனையை ஏற்று பாப் அப் விண்டோ திறப்பதை நிறுத்தி விட்டேன். இதுபோல எமது வலைப்பூவில் ஏதாவது குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டி, எனது பதிவுலக வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் வாசகர்களே...!
//சினிமா நிருபர் said...
நன்றி சென்ஷி... தங்களது ஆலோசனையை ஏற்று பாப் அப் விண்டோ திறப்பதை நிறுத்தி விட்டேன்.
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இவ்ளோ ஸ்பீடா... :))
என் பேச்ச கேக்க ஆளில்லன்னு இப்ப யாரும் தமிழ்மணத்துல கைய தூக்க முடியாதபடி செஞ்சுட்டீங்கண்ணே :))
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!