CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-29

நடன நடிகரை அவமானப்படுத்திய ராய் நடிகை : kisukisu கார்னர்

அந்த லட்சுமமான ராய் நடிகை நடித்த எந்த படமும் இதுவரை எந்த படமும் ஓடவில்லை. கிரிக்கெட் கேப்டனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டதன் மூலம் பிரபலமானவர் இவர். ஆனால் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமாகிய நடிகையைப் போல அலம்பல் செய்து வருகிறார். இதனால் தமிழ் திரையில் இவருக்கு வெட்டிபந்தா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

தற்போது ஒரு அதிரடி முடிவை அறிவித்திருக்கிறார் இந்த நடிகை. அதாவது, நான் முன்னணி நாயகர்களுடன்தான் நடிப்பேன். புதுமுகங்களுடனோ, முன்னணி லிஸ்டில் இல்லாதவர்களுடனோ நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம். இதற்கு காரணம் என்ன? என்று விசாரித்தால், சமீபத்தில் நடன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். அப்போது நடனத்தின் முகத்தில் அடித்துபோல் பதில் சொல்ல லட்சும நடிகை, இதுபோன்றவர்களுடனெல்லாம் நடித்தான் என் இமேஜ் என்ன ஆவது என்று கொக்கரித்துள்ளார்.

இதுபோல இனி யாரும் தன்னிடம் வந்து கால்ஷீட் கேட்கக்கூடாது என்பதற்காகத்தான் இனி முன்னணிகளுடன்தான் என்று நெற்றியில் எழுதி ஒட்டாத குறையாக சொல்லி வருகிறார் லட்சுமம்.

3 comments:

Samuthra Senthil said...

நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் பின்னூட்டத்தில் தெரிவித்துவிட்டு செல்லுங்கள் வாசகர்களே...!

Anonymous said...

லட்சமி ராய் என்று ‌பேரை போட்டிருக்கலாமே நிருபர்.

Ganeshkumar said...

லட்சுமிராய் இப்படியெல்லாம் பண்ணுதா நிருபர்?

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!