
இளைய தளபதி விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படத்துக்கு வில் என்று பெயரிட்டுள்ளனர்.
போக்கிரி படத்துக்கு பிறகு நடிகரும், டைரக்டருமான பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது பழைய செய்தி. போக்கிரி படம் செம ஹிட் ஆனது. இந்த படத்தை இந்தியிலும் பிரபுதேவா இயக்கி வருகிறார். இதற்கிடையில் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான குருவி படம், எதிர்பார்த்த அளவு இல்லை என்கிற விமர்சனத்தை பெற்றாலும் வசூலை வாரி குவித்து வருகிறது.
இந்நிலையில் விஜய் அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்துக்கு சிங்கம் என்று பெயரிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் சிங்கம் என்ற தலைப்பை தான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதாக டைரக்டர் ஹரி அதிரடியாக அறிவித்தார். இதனால் சிங்கம் தலைப்பு விஜய்க்கு சிக்காமல் போனது. தற்போது விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படத்துக்கு வில் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவிருக்கிறது.
கொசுறு தகவல் : நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது தெலுங்கில் வில் என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
நிருபர் கமென்ட் : வில்லும் வில்லங்கமாக இருந்தால் சரிதான்...!
(இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!)






0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!