CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-13

தசாவதாரம் : 10 கேரக்டர்கள் பற்றிய விரிவான அலசல்


காலையில் நேரமின்மை காரணமாக சுறுக்கமாக தசாவதாரம் குழுவினருக்கு 6 கேள்விகளை கேட்டதோடு நிறுத்திவிட்டேன். அலுவலக நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டு மாலையில் வலைப்பதிவர்கள் எத்தனைபேர் விமர்சனம் எழுதியிருக்கிறார்கள் என்பதை பார்த்தேன். தசாவதாரத்தின் பல விமர்சனங்கள் பல வலைப்பூக்களில் இடம்பெற்றிருந்தன. அவற்றில் எதையும் நான் குறைகூற விரும்பவில்லை. அதேநேரத்தில் மற்ற வலைப்பதிவாளர்களை விட இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக... அதேநேரத்தில் சுவாரஸ்யமாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பியதன் விளைவுதான் இந்த அலசல் கட்டுரை.

தசாவதாரம் படத்தின் ஹைலைட்டே உலக நாயகன் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்திருப்பதுதான். அதனால் அந்த 10 கேரக்டர்களைப் பற்றிய விரிவான அலசலை இங்கே உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.

முதல் கேரக்டர்

சோழர் கால வைணவ இளைஞர் : 12ம் நூற்றாண்டில்தான் தசாவதாரம் படமே ஆரம்பிக்கிறது. சைவ மதத்தின் பால் பெரும்பற்றுகொண்ட மன்னராக நெப்போலியன். வைணவ இளைஞராக உலக நாயகன் கமல்ஹாசன். ரங்கநாதர் சிலையை பெயர்த்து எடுக்கும்போது பாதாளத்தில் இருந்து அடியேன் ராமானுஜ தாசன்... என்று கம்பீர குரல் எழுப்பி அகன்று விரிந்த முதுகைக் காட்டி, பின்னர் கொளுகொளுவென்ற முன்னழகை காட்டி, ஆக்ரோஷம் கொண்ட முகத்தை காட்டுகிறார்கள். அனைத்துமே ரசிக்க வைக்கிறது. உயிரே போனாலும் ஓம் நமச்சிவாய என்று சொல்ல மாட்டேன் என்று விடாப்பிடி பிடிக்கும் கமலை, மனைவி அசின், சின்னஞ்சிறு மகன், பெற்றோர், உற்றார் உறவினர் என அனைவரும் வேண்டி, மன்றாடி கேட்தும்... ஓம்.... என்று இழுத்து நமோ நாராயணா.... என்று முடிக்கிறார். தனது விடாப்பிடியால் ரங்கநாதர் சிலையுடன் சேர்த்து கட்டப்பட்டு கடலில் தூக்கி வீசப்படுகிறார் கமல். அங்கேயே உயிர் பிரிகிறது.

2வது கேரக்டர்

விஞ்ஞானி : அமெரிக்காவில் பணியாற்றும் இளம் விஞ்ஞானி. படம் முழுக்க முழுக்க தோன்றி கலக்கும் இரு கமல்களில் இவரும் ஒருவர். காற்றில் பரவினால் கோடிக்கணக்கான மக்களை அழிக்கும் வைரஸ் கிருமியை, வில்லன் கும்பலுக்கு விற்க நினைக்கும் உயர் அதிகாரிகளிடம் இருந்து, வைரஸை கடத்திவந்து கடைசி வரை அந்த வைரஸை காற்றில் கலக்க விடாமல் இருக்க போராடும் ஸ்மார்ட் கேரக்டர். இவருக்கு ஜோடியாக ரயில், பஸ், கார், பைக் என்று எல்லா சேசிங் காட்சிகளிலுமே அக்ரஹாரத்து அசினும் இருக்கிறார். அசடு வழியும் அசினால் விஞ்ஞானி தோன்றும் பெரும்பாலான காட்சிகள் கலகலப்பாகவே நகர்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் கட்டுமான பணி நடைபெறும் கட்டடத்தில் தாவித்தாவி சண்டை போடும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார்.

3வது கேரக்டர்

கொலைவெறியன் :
எப்போது பார்த்தாலும் துப்பாக்கியுடன் திரியும் இவரை துப்பாக்கி கமல் என்றுகூட சொல்லலாம். இவர் தோன்றும் முதல் காட்சியில் கமலை துரத்தத்தொடங்குகிறவர் கடைசியில் வைரஸ் கிருமியை தானே சாப்பிட்டு சாகும் வரை நடிப்பில் அட போட வைத்திருக்கிறார். பட் பட் என்று போட்டுத் தள்ளுவது ஹாலிவுட்டை மிஞ்சி விடுகிறது. அதற்கேற்றாற்போல கார் சேசிங் காட்சிகள். இவரும் படம் முழுக்க திரையில் தோன்றிக் கொண்டே இருக்கிறார். அதனால் இவரது முகம் ரசிகர்களுக்கு நல்ல பரீட்சையம் ஆகி விடுகிறது.

4வது கேரக்டர்

ஜப்பான் கராத்தே மாஸ்டர் :
இவரைப் பார்த்தால் கமல்ஹாசன்தானா இது? என்று கேள்வி எழும்புகிறது. ஜப்பானியருக்கே உரித்தான சிரிய கண்களுடன் தோன்றும் இந்த கமல், கராத்தேயில் பின்னியெடுக்கிறார். தனது தங்கையையும், தங்கை கணவரையும் விஞ்ஞானி கமல்தான் கொன்று விட்டார் என கருதி அவரை பழிவாங்க புறப்படும் கராத்தே மாஸ்டர் கமல், கடைசியில் உண்மை புரிந்து கொலைவெறியன் கமலை போட்டுத்தள்ள துடிக்கும் காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் போடும் சண்டை கரவொலி எழுப்பி ரசிக்க வைக்கிறது. சும்மா பறந்து பறந்து அடிச்சிருக்காருங்கோ...!

5வது கேரக்டர்

உளவுத்துறை அதிகாரி :
ஆந்திராவை பிறப்பிடமாக கொண்ட... அறைகுறையாக தமிழை பேசும் உளவுத்துறை அதிகாரியாகவும் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டர்களில் சிரிப்பலை எழுகிறது. அந்த அளவுக்கு காமெடி செய்திருக்கிறார். அதே நேரத்தில் நல்ல பல கருத்துக்களையும் அவ்வப்போது உதிர்த்து தள்ளுகிறார். குறிப்பாக உதாரணத்துக்கு ஒன்றே ஒன்றை சொல்லலாம்..., நான் தெலுங்கு தமிழ் கற்றுக் கொண்டேன். இந்தியும் தெரியும். நீ தமிழ்... உனக்கு தமிழை விட்டால் இங்கிலீஸ் மட்டும்தான் தெரியும். இதுல எப்படிய்யா தமிழை வளர்க்க போறீங்க... என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு போன்ற பாஷைகளை பேசி பலே போட வைக்கிறார்.

6வது கேரக்டர்

பஞ்சாபி கஜல் பாடகர் :
சில காட்சிகளில் வந்தாலும் நெஞ்சில் நிற்கும் கேரக்டர். இவர் தோன்றும் முதல் காட்சியிலேயே ரசிகர்கள் மனதில் நின்று விடுகிறார். நான் தமிழை மறக்க மாட்டேன். என்னை வாழ வைத்த தமிழ் ரசிகர்களையும் மறக்க மாட்டேன் என்று பேசும் டயலாக்கை தொடர்ந்து விசில் சத்தமும், கைத்தட்டல் சத்தமும் நிற்பதற்கு சில நொடிகள் ஆகின்றன. இவரது கேரக்டரின் இன்னொரு சிறப்பையும் குறிப்பிட்டு சொல்லலாம். பிரபல பாப் பாடகரான இவருக்கு கேன்சர் நோய். டாக்டர் இரண்டு சாய்ஸ் கொடுக்கிறார். ஒன்று... ஆபரேஷன் செய்தால் குரல் போய்விடும். பாட முடியாது. மற்றொன்று... ஆபரேஷன் செய்யாவிட்டால் இன்னும் 6 மாதகாலம் மட்டுமே உயிரோடு இருப்பீர்கள் என்கிறார் டாக்டர். இதில் இரண்டாவது சாய்ஸை தேர்ந்தெடுக்கும் பாடகர் கமல், என் உயிரே என் மனைவிதான். அவருக்காகவாவது நான் உயிருடன் வாழ வேண்டும் என்று சொல்லும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.

7வது கேரக்டர்

முதாட்டி கமல் :
கமல்ஹாசன் இந்த கேரக்டரில் நடிக்க கொஞ்சம் அதிகமாகவே சிரத்தை எடுத்திருக்க வேண்டும். மற்ற கேரக்டர்களுக்கு முகத்தில் மட்டும்தான் மேக்கப். இந்த கேரக்டரில் கை, கால்களுக்கெல்லாம் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். இவர் தோன்றும் முதல் காட்சியில் தத்ரூபமாக ஒரு வயதான மூதாட்டியாகவே தெரிகிறார். காணாமல் போன தனது மகனை நினைத்து மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி கமலிடம் வைரஸ் அடங்கிய பாக்ஸ் கிடைப்பதும், அவரிடம் இருந்து அதனை பெற விஞ்ஞானி கமல் படாத பாடு படுவதும் ரசிக்க வைக்கின்றன. பாட்டியை விசாரணைக்கு அழைத்து செல்ல உளவுத்துறை கமல் வரும்போது, பாட்டி பேசும் தடாலடி வசனங்கள் நகைப்பூட்டுகின்றன. க்ளைமாக்ஸில் தலித் இளைஞராக வரும் கமல் சுனாமி வெள்ளத்தில் சிக்கி இறந்து கிடப்பதை பார்த்து, என் மகன் கிடைத்து விட்டான். ஆனால் அவன் இறந்து விட்டான் என்று சொல்லி அழும் காட்சி உருக்கம்.

8வது கேரக்டர்

ஏழரை அடி உயர இஸ்லாமிய கமல் :
அபூர்வ சகோதரர்கள் படத்தில் குட்டை கமலாக நடித்த கமல்ஹாசன் இந்த படத்தில் ஏழரை அடி உயர கமலாகவும் நடித்திருக்கிறார். அப்பாவியாக தோன்றும் இவர், முதல் காட்சியிலேயே கிச்சுகிச்சு மூட்டுகிறார். விஞ்ஞானி கமலையும், அசினையும் கணவன்& மனைவி என்று கருதி இவர் அடிக்கும் அப்பாவித்தமான லூட்டி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. ஏழரை அடி உயர கமலிடம், விஞ்ஞானியும், அசினும் அன்னார்ந்து பார்த்து பேசும் காட்சிகளிலும், மசூதிக்குள் 200 பேருக்கு மத்தியில் உயராக நின்று அசடு வழியும் சிரிப்பை உதிர்க்கும் காட்சியிலும் பாராட்டுதலுக்குரி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

9வது கேரக்டர்

தலித் இளைஞர் :
தமிழகத்தையே ஆடிப்படைத்து வரும் மணற் கொள்ளைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி எண்ட்ரி ஆகிறார் தலித் கமல். இவர் பேசும் வசனங்களில் அனல் தெறிக்கிறது. கருப்பு உருவத்துடன், சிவந்த கண்களுடன் தோன்றும் இவர் மற்ற கமல்களின் கேரக்டர்களுக்கு துளியும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறார். க்ளைமாக்ஸில் சுனாமியில் சிக்கிய குழந்தைகளையெல்லாம் காப்பாற்றி விட்டு, தனது இன்னுயிரை கடல் தண்ணீருக்குளேயே விடும் காட்சி கண்ணீரை வரவழைக்கிறது.

10வது கேரக்டர்


இந்த கேரக்டர்தான் படத்தில் மெகா ஹைலைட் என்று சொல்லலாம். ஆம்...! அமெரிக்கா ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் போன்ற தோற்றம். இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் டாப் டென்னில் முதலிடத்தை பிடித்து விடுகிறார். வைரஸ் கிருமியுடன், விஞ்ஞானி இந்தியாவுக்கு தப்பி விட்டார் என்று கேள்விப்பட்டதும், அந்த விஞ்ஞனியை தடுத்து நிறுத்த வேண்டாம். நான் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசுகிறேன் என்று சொல்லும் காட்சிகளில் விசில் சத்தம் காதை பிளக்கிறது. போனில் பேசிக் கொண்டே, தனது தொண்டர்களுக்கு கையசைக்கும் காட்சிகளில் ஒரிஜினல் ஜார்ஜ் புஷ்ஷே தோன்றுவிடுவார் என்று சொல்லும் அளவுக்கு அருமையாக புன்னகை பூரித்து நடித்திருக்கிறார்.

படத்தின் ஹெலைட்ஸ்...!

* வைணவ கமல்ஹாசனின் உடலை குத்தி கிழித்து தொங்கவிடுவது,
* மூதாட்டி கமல் பீரோவுக்குள் ஓடி ஒளிந்து கொள்வது,
* பிரமாண்டமான சுனாமி பேரலை
* வைரஸ் கிருமியை சாப்பிட்டதும் குரங்கு துடிதுடித்து சாவது. துப்பாக்கி கமலும் அதேபோல வைரஸை சாப்பிட்டு விட்டு துடிதுடித்து சாவது.
* சுனாமி சேதங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டது.
* சுனாமிக்கு முந்தைய ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளை தேதி வாரியாக காட்டியது.
* பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதியையும் படத்தில் சேர்த்தது.

-இப்படி பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பிரமாண்ட படம் பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கண்டிப்பாக தசாவதாரத்தை பாருங்கள். (கதை புரியவில்லை... என்றால் நான் பொறுப்பல்ல...!)

எனக்கு பிடித்தது : படத்தின் கடைசியில் வரும் உலக நாயகனே பாடல். இந்த பாடலில் கமல்ஹாசனுக்கு எப்படியெல்லாம் மேக்கப் போட்டார்கள் என்பதை கிளிப்பிங்ஸாக காட்டி, அவர் எடுத்த சிரத்தையை கண்முன்னே நிறுத்துகிறார்கள். அவர் எடுத்த இந்த ரிஸ்க்கிற்காகவாவது கண்டிப்பாக தியேட்டரில் போய் தசாவதாரத்தை பாருங்கள்.

18 comments:

Samuthra Senthil said...

எனது இந்த வித்தியாசமான அலசல் குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டுச் செல்லுங்கள் வாசகர்களே...!

Anonymous said...

//சினிமா நிருபர் said...
எனது இந்த வித்தியாசமான அலசல் குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டுச் செல்லுங்கள் வாசகர்களே...!//

கலக்கிட்டீங்க நிருபர் கலக்கிட்டீங்க. ரொம்ம்ம்ம்பவே நல்லாருக்குதுங்கோ...

கிரி said...

நிருபர் நான் உங்கள் விமர்சனத்தை படிக்கவில்லை. படத்தை பார்த்த பிறகு படித்து விட்டு திரும்ப ஒரு பின்னூட்டம் போடுகிறேன்.

rapp said...

ஆஹா ரொம்ப ரொம்ப சூப்பருங்க. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். எப்டியோ எல்லாரும் திரும்பி பார்க்கிரார்போல ஒரு படத்தை கொடுத்துட்டாருங்க. அதுவே போதும்.

முரளிகண்ணன் said...

அலசல் அருமை.

வந்தியத்தேவன் said...

என்னை முந்திவிட்டீர்கள் நிருபர்.
நானும் 10 அவதாரங்களையும் பற்றி மட்டும் எழுதலாம் என நினைத்தேன் காரணம் கதையை எழுதி மற்றவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றவிரும்பவில்லை. படம் ஆரம்பித்து இடைவேளையின் பின்னர் தான் நானே பிலெட்சரும் கமல் என அறிந்துகொண்டேன் அதுவும் பக்கத்திலிருந்த சின்னப்பையன் ஒருவன் சொல்லியதில். இதற்கான காரணம் வலையர்களின் பதிவுகளில் கதையைப் படிக்காததுதான்.

மங்களூர் சிவா said...

படம் முதல் 15 நிமிடங்கள் சூப்பர்.

மங்களூர் சிவா said...

பெருமாள் பெருமாள்னு அக்ரஹாரத்து அசின் மாமி கூடவே வந்திருவான்னா சயிண்டிஸ்ட் கோவிந்தராஜன்கூடவும் அந்த அமெரிக்க வில்லன் பேரு என்ன ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நானே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.

:)))

மங்களூர் சிவா said...

பெருமாள் பெருமாள்-னு ராமாயணம் பாடறப்பல்லாம் மகராசி மல்லிகா செராவத் இவளை (அசினை) போட்டுத்தள்ளாம போய் சேந்துட்டாளேன்னு எரிச்சலோ எரிச்சல்
:((

மங்களூர் சிவா said...

சந்தான பாரதியோட நல்ல வாய்ப்பை !?!? (எல்லாம் படம் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா) ஒரு ட்ராமா கும்பல் வந்து கெடுத்து சின்னாபின்னமாக்கீடுது.

நம்ம எல்லாருக்கும் ஒரே சோகமா போயிடுது

:)))))))))

மங்களூர் சிவா said...

நல்லா க்ராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கஷ்டப்பட்டிருக்காங்க.

டெக்னாலஜி இருப்பதாலேயே குறைகளை எல்லாம் விட்டு படம் ஆஹா ஓஹோ சூப்பர் என சொல்லிவிடமுடியாது
:((

Samuthra Senthil said...

பின்னூட்டமிட்டுள்ள நல்லூர் சுதா, கிரி, rapp, முரளிகண்ணன், வந்தியத்தேவன், மங்களூர் சிவா ஆகியோருக்கு நன்றி....!

G.Ragavan said...

அத்தனை அவதாரங்களிலும் இரண்டு அவதாரங்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. ஒன்று பலராம் நாயுடு. மற்றொன்று பூவராகன். பாட்டு சுமார் ரகம். மற்றவையெல்லாம் ஏதோதான்.

ஆனா படத்தைப் பார்க்கலாம்.

VSK said...

பத்து வேடங்களைப் பற்றிய அலசல் நல்லாவே இருந்ததுங்க!

ஆனல், இப்படி ஒரு படமெடுக்கும்போது, பத்தையும் இவரே செய்திருக்கணுமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை ஐயா.

மன்னிக்கவும்.

Samuthra Senthil said...

//அலசல் நல்லாவே இருந்ததுங்க!//

நன்றி விஎஸ்கே.


//இப்படி ஒரு படமெடுக்கும்போது, பத்தையும் இவரே செய்திருக்கணுமா//

இதே கேள்வி எனது மனதிலும் எழுந்தது வி.எஸ்.கே....! இதை எனது நண்பர் ஒருவரிடம் சொன்னபோது... நல்லவேலை... கலைஞர், ஜெயலலிதா, மன்மோகன் சிங் வேடத்தையாவது விட்டு வைத்தாரே என்று கிண்டலடித்தார். அவரது கிண்டலில் இருந்த உள்அர்த்தத்தை நினைக்கும்போது என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. பின்னூட்டத்துக்கு நன்றி விஎஸ்கே.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

வில்லன் கமல், களிமுல்லகான் ,ஜப்பான் மாஸ்டேர்,
மூதாட்டி ஆகியோர் முகத்தில் மாஸ்க் மாட்டி யதை போலவே உள்ளனர் .
படத்தை விட உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர் .

அபி அப்பா said...

நல்லா இருக்கு சார் விமர்சனம்!!!

Anonymous said...

Actually 10 role kamal panni iruka vendiya avasiyam ellam illai.but SIVAJI navaratri padatile 9 roles panni irukar.adhai vida jastiya pananum apidingara oru aarvam than vera onum nahi!!!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!