CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-01

காதலிக்க நேரமில்லை படம் ரீமேக் ஆகிறது


ஒரு காலத்தில் சக்கை போடு போட்டு படம் காதலிக்க நேரமில்லை. அந்த காலத்திலேயே காதலை பறைசாற்றிய இந்த படம் இந்தக்கால மாற்றங்களுடன் ரீமேக் ஆகவிருக்கிறது. தற்போது வெடிகுண்டு முருகேசன், குசேலன், இந்தி டாக்ஸி ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகர் பசுபதி, இம்மூன்று படங்களுக்கு பிறகு காதலிக்க நேரமில்லை ரீமேக் படத்தில் நடிக்கவிருக்கிறார். டைரக்டர் மனோபாலாதான் இந்த படத்தை இயக்குகிறார். ஒரிஜினல் காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமன் ஏற்றிருந்த வேடத்தில் பசுபதி நடிக்கவுள்ளார். இதுதவிர, டி.எஸ்.பாலையாவின் கேரக்டரில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், நாகேஷ் கேரக்டரில் வடிவேலுவும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தில் நடிக்கவிகருக்கும் கதாநாயகிகள் குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லையாம்.

3 comments:

முரளிகண்ணன் said...

இதற்கு முன் பாலையா - பிரகாஷ்ராஜ், ரவிசந்திரன் - பிருத்விராஜ் என ஒரு செய்தி படித்தேன் (வேறிடத்தில்). அது என்ன ஆனது?

லேகா said...

சினிமா நிருபர்...

இவ்வளவு சுவை மிகுந்த சினிமா செய்திகள் கொண்ட வலைத்தளத்தை இத்தனை நாள் தெரியாது விட்டுவிட்டேனே..படித்து கொண்டே இருக்கின்றேன்..மிக்க நன்று..

அன்புடன்,
லேகா
http://yalisai.blogspot.com/

Samuthra Senthil said...

//லேகா said...
சினிமா நிருபர்...

இவ்வளவு சுவை மிகுந்த சினிமா செய்திகள் கொண்ட வலைத்தளத்தை இத்தனை நாள் தெரியாது விட்டுவிட்டேனே..படித்து கொண்டே இருக்கின்றேன்..மிக்க நன்று..//

நன்றி லேகா..! தொடர்ந்து வாருங்கள்..! சுவாரஸ்ய செய்திகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். படித்து ரசியுங்கள். குறைகளையும், நிறைகளையும் பின்னூட்டமிடுங்கள்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!