
சிவாஜி படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஸ்ரேயா. வடிவேலுவுடன் இந்திலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் அந்த புகழ் தலைகீழாக இறங்கியது என்பது தனி கதை.
தற்போது கந்தசாமி படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என்று அவ்வப்போது பறந்து சென்று வருகிறார். அவர் தெலுங்கில் நடித்த ஜில்லா படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஸ்ரேயா இதுவரை காட்டாத கவர்ச்சியை காட்டியிருக்கிறாராம் (இனிமே காட்டுறதுக்கு என்ன இருக்கு? என்று மனசுக்குள் முனுமுனுப்பது கேட்கிறது.) இந்த படத்தை தமிழில் 80 பிரிண்ட் போடப்போகிறார்களாம். ஸ்ரேயாவில் கவர்ச்சியை போஸ்டாரக அடித்து ஒட்டினாலே போதும். ரசிகர்கள் தியேட்டருக்கு வந்துவிடுவார்கள் என்பது அந்த படத்தின் தயாரிப்பு தரப்பின் நம்பிக்கை.
ஜில்லா படத்தின் ஸ்டில்களை பார்த்த பல தியேட்டர் உரிமையாளர்கள் ஜில்லாவை வாங்க போட்டி போடுகிறா£ர்களாம். இதுஒருபுறமிருக்க... ஜில்லா படத்தின் மூலம் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று காத்திருக்கிறார் ஸ்ஸ்ஸ்ஸ்ரேயா.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!