
ரகசிய திருமணம் செய்துவிட்டு, திருமணமே நடக்கவில்லை என்று சொல்லும் நடிகைகள் மத்தியில் எனக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது என்று பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் நடிகை கோபிகா.
ஆட்டோகிராப், 4 ஸ்டூடண்ஸ், கனாகண்டேன், எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை கோபிகா. தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த கோபிகாவுக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. இவருக்கு நிச்சயம் செய்திருக்கும் மாப்பிள்ளை லண்டனில் டாக்டராக உள்ளார். பெயர் அஜிலெஸ். சொந்த ஊர் கேரளாதான். ஜூலை 17ம் தேதி கேரள மாநிலம் கோதமங்கலத்தில் உள்ள தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.
இதுபற்றி கோபிகாவிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டோம். எனது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. நான் ரகசியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. தற்போது எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. திருமணத்துக்கு பிறகு நடிப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. லண்டன் செல்வேனா என்பதும் தெரியவில்லை, என்றார்.
1 comments:
வேற என்னதான் தெரியுமாம்... கேட்டு சொல்லுங்க...
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!