
குருவி படத்துக்கு பிறகு இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் வில்லு. போக்கிரி படத்தை இயக்கிய பிரபுதேவாதான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த புதிய படத்துக்கு முதலில் சிங்கம் என்று பெயரிட்டனர். ஆனால் சிங்கம் என்ற பெயரை டைரக்டர் ஹரி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்ததால் அந்த தலைப்பை வைக்க முடியாமல் போனது. இதனால் வில் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார் பிரபுதேவா. வில் என்றால் வில் பவர் என்ற அர்த்தத்தில்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தனர்.
இந்த நிலையில் நடிகரும், டைரக்டருமான எஸ்.ஜே.சூர்யா அடுத்து இயக்கவுள்ள படத்துக்கு வில் என்று பெயரிட்டிருப்பதால் அந்த தலைப்பும் சர்ச்சையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை சூதாரித்துக் கொண்ட விஜய், தயாரிப்பாளருடன் உடனடியாக ஆலோசித்தார். பின்னர் வில் என்ற தலைப்புடன், லுவை சேர்த்தால் வில்லு என்று ஆகிவிடும். வில்லு என்றால் ஆயுதம் என்று பொருளாகிவிடும் என்று விஜய் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஒரேநாளில் வில்லு என்ற பெயரை பதிவு செய்து, சூட்டிங்கை தொடங்கி விட்டார்களாம். வில்லு படத்துக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். இவர்தான் தசாவதாரம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது கொசுறு தகவல்.
1 comments:
வில்லு வளைந்தால் பரவாயில்லை. உடையாமல் வரட்டும்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!