

Image by Cool Text: Logo and Button Generator - Create Your Own
ஒரு சினிமா நிருபராக எனக்கு கிடைக்கும் சினிமா செய்திகள் மற்றும் சினிமா படங்களை ரசிகர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வழங்கி வருகிறேன். இந்த ஒரு மாத காலத்தில் இன்று வரை 6100 வாசகர்கள் என்து வலைப்பூவில் இடம்பெற்றுள்ள பக்கங்களை 27 ஆயிரம் முறை பார்த்திருக்கிறீர்கள். எனது வலைப்பூ எத்தனை பேருக்கு பிடித்தது என்பது தெரியவில்லை. காரணம் ஒரு சிலர் மட்டுமே பின்னூட்டமிடுகிறீர்கள். பின்னூட்டங்கள் அதிக அளவில் வந்தால் அது என்னை இன்னும் ஊக்கப்படுத்தும் என்று நினைப்பவன் நான். அதனால்தான் ஒவ்வொரு செய்தி எழுதும்போதும் கடைசியில் பின்னூட்டமிடுமாறு வாசகர்களுக்கு வேண்டுகோளும் விடுத்து வருகிறேன்.
சரி விஷயத்துக்கு வருகிறேன்....! நான் அலுவலக நிமித்தமாக வெளியூர் செல்லவேண்டியிருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு (வெள்ளி மற்றும் சனி) நிருபர் வலைப்பூவில் புதிய பதிவுகள் எதுவும் இடம்பெறாது. நிருபரின் செய்தி சேவை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு - சினிமா நிருபர்.
2 comments:
கவலப்படாதே சகோதரா.......
இந்த பின்னூட்டம் போதுமா...
//இந்த ஒரு மாத காலத்தில் இன்று வரை 6100 வாசகர்கள் என்து வலைப்பூவில் இடம்பெற்றுள்ள பக்கங்களை 27 ஆயிரம் முறை பார்த்திருக்கிறீர்கள்//
வாழ்த்துக்கள் சினிமா நிருபர்.
//பின்னூட்டங்கள் அதிக அளவில் வந்தால் அது என்னை இன்னும் ஊக்கப்படுத்தும் என்று நினைப்பவன் நான்//
உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான். பிடித்து தான் இத்தனை பக்கங்கள் படித்து இருக்கிறார்கள்.. ஏம்பா! இப்படி தாறுமாறா படித்து இருக்கீங்களே பின்னூட்டம் போட்டு இவரை உற்சாகபடுத்தினா என்ன! குறைந்தா போயிட போகிறீங்க.
//அடுத்த இரண்டு நாட்களுக்கு (வெள்ளி மற்றும் சனி) நிருபர் வலைப்பூவில் புதிய பதிவுகள் எதுவும் இடம்பெறாது//
அய்யயோ :-((((((
//செய்தி சேவை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்//
வரும் போது நிறையா செய்தியோட வாங்க :-( .. நான் உங்கள் தொடர் வாசகன். என்னை மாதிரி நிறைய பேர் இருப்பாங்க ஆனால் பின்னூட்டம் இடாம இருப்பாங்க. இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் பதிவை படித்து சந்தோசமா போவதொட நிறுத்திக்காம பின்னூட்டம் போட்டு நிருபரை உற்சாக படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன் :-)
அன்புடன்
கிரி
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!