
பருத்தி வீரன் இயக்குனர் அமீர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரை மறைமுகமாக தாக்கி பேசியதாக கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாவனாஸ்ரீ கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் படம் காதல் ஓசை. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் டைரக்டர் அமீர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :-
இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் தமிழ் சினிமா பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. உலக நாடுகள் முழுவதும் தமிழ் சினிமா ரிலீஸ் ஆகிறது. ரூ.100, 200 கோடிகளில் தயாராகி உலக சினிமாவை பயமுறுத்தி கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் ஒரு படம் எத்தனை கோடி செலவில் உருவாகிறது என்று ரசிகர்கள் பார்ப்பதில்லை. படத்தில் என்ன சொல்கிறார்கள்? எப்படி சொல்கிறார்கள் என்றுதான் பார்க்கிறார்கள். கோடிக்கணத்தில் பணம் செலவழித்து படம் எடுத்து விட்டால் மட்டும் ஓடிவிடும் என்று சொல்ல முடியாது. படத்தில் புதிய முயற்சி இருக்க வேண்டும். புதிய முயற்சிக்கு என்றைக்குமே மக்கள் வரவேற்பு தருவார்கள்.
இவ்வாறு அமீர் பேசினார்.
அப்போது விழா அரங்கில் இருந்த சில சினிமா பிரமுகர்கள் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து மட்டும் படம் எடுத்தால் போதாது என்று யாரை சொல்கிறார்? என்று காதுகளுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், ரஜினியையும், கமலையும்தான், அமீர் இப்படி போட்டு தாக்குகிறார், என்று பேசிக் கொண்டனர். ஆனார் அமீர் என்ன நினைத்து பேசினார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
விழாவில் படத்தின் புதுமுக நாயகன், ரித்திக், புதுமுக நாயகி ராகி, நடிகை கீர்த்தி சாவ்லா, திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், டைரக்டர்கள் குகநாதன், சுப்பிரமணியம் சிவா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2 comments:
தலைவரை தாக்கி பேசுன அந்த அமீரை தமிழ் சினிமாவை விட்டே தள்ளி வைக்கணும்.
//NELLAI said...
தலைவரை தாக்கி பேசுன அந்த அமீரை தமிழ் சினிமாவை விட்டே தள்ளி வைக்கணும்.
//
கோபப்படாதீர்கள் நெல்லை.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!