2008-06-24
நடிகரின் டார்ச்சரால் அவசர திருமணம் செய்யும் நடிகை
நடிகர் ஒருவரது கல்யாண டார்ச்சர் காரணமாக அம்மு நடிகைக்கு அவசரம் அவசரமாக வேறு மாப்பிள்ளையுடன் திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.
அம்மு என்ற பெயரில் விபசார அழகியாக திரையில் தோன்றி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நாயகியின் மேல் அந்த வித்தியாச நடிகருக்கு ஒரு கண். போதாதற்கு இருவரும் சேர்ந்து நடித்த அந்த படத்தில் வேறு உணர்ச்சிகளை தூண்டும் வகையிலான காட்சிகள். மனைவி விவாகரத்து செய்துவிட்டு இருக்கும் வித்தியாச நாயகன், அம்முவிடம் கிறுக்கல் கவிதைகளை எடுத்து விட்டிருக்கிறார். பின்னர் காதல் மொழி பேசத் தொடங்கியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இதையெல்லாம் வித்தியாச நாயகனின் வழக்கமான கடி காமெடி என நினைத்துக் கொண்டிருந்த அம்முவுக்கு திடீரென ஒரு நாள் அதிர்ச்சி. என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டிருக்கிறார் அந்த நாயகன். இந்த அதிர்ச்சியில் இருந்து நாயகி மீண்டு வருவதற்குள், வித்தியாசம் மீண்டும் மீண்டும் கல்யாண டார்ச்சர் செய்யத் தொடங்கியிருக்கிறது.
பொறுத்துப்பார்த்த நாயகி, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்ல... விவகாரம் வெளியே தெரிந்தால் சிக்கலாகி விடும் என கருதி, கப் சிப்பென் அம்முவுக்கு கல்யாண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விட்டனர். உறவினர் ஒருவரையே திருமணம் செய்யவிருக்கும் அம்மு, திருமணத்துக்குப் பிறகு சினிமா பக்கமே தலை வைத்து படுக்கப் போவதில்லை என்று சபதம் ஏற்றுள்ளாராம்.
வித்தியாச நாயகனும், அம்மு நாயகியும் யாரென்று கண்டுபிடித்து விட்டீர்களா வாசகர்களே... கண்டுபடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
Labels:
kisu kisu
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் வாசகர்களே...!
பார்திப்பன் அம்மு........
பார்த்திபன்-பாரதி ?
http://tinypic.com/view.php?pic=neui3t&s=3
Ithuthana Mattaru...
இங்கெல்லாம் நெகாடீவ் இமேஜ் போட்டால் எடுபடாது...
அப்படியே எடுத்து விண்டோஸ் paint ல் போட்டு இன்வெர்ட் கலர்ஸ் போட்டால் ஒரிஜினல் உருவங்கள் தெரியும்.
:)
நான்கூட படிச்சேங்க. நம்பவே முடியல. அவரும் கஜினி முகம்மதாட்டம் நெறயப்பேரு கிட்ட கேக்குறாரு.............
ஹா ஹா
:)))
//நிருபர் வலைப்பூவில் நீங்கள் இடும் பின்னூட்டம் எங்கள் வளர்ச்சிக்கு உதவும் உரம்.//
தெளிக்க ஆரம்பிச்சா ஒரே அடியா தான் தெளிப்போம். பரவா இல்லையா?
///சினிமா நிருபர் said...
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் வாசகர்களே...!///
வாசகர்கள் மட்டும் தான் பதிவு செய்யனுமா? பதிவர்களும் வாசகர்கள் தான் என்றால் நீங்களும் ஒரு வாசகர் தானே? நீங்களும் வாசகர் என்றால் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே என்று ஏன் சொல்ல வேண்டும்? சரி உங்களது வலைப்பூவில் நீங்கள் பதிவர் நாங்கள் வாசகர் என்றால் ஒவ்வொருவரும் அவரவர் வலைப்பூவில் தான் பதிவரா? அப்ப நான் எனது வலைப்பூவை விட்டு வேறு இடம் சென்றால் பதிவர் இல்லையா? ஒரே குழப்பமா இருக்கே?????????சரி நீங்கள் நிருபர் என்று பெயர் வைத்திருப்பதால் நாங்கள் வாசகர் என்றால் நீங்கள் பதிவர் இல்லையா? இல்லை ஒருவேளை நிருபர் பதிவர் என்று ஏதேனும் புதுப்பெயரா? அப்படியென்றால் நாங்கள் எல்லோரும் வாசகர் பதிவரா? யாராவது விளக்குங்கப்பா:))
வாசகர்கள் மட்டும் தான் பதிவு செய்யனுமா? பதிவர்களும் வாசகர்கள் தான் என்றால் நீங்களும் ஒரு வாசகர் தானே? நீங்களும் வாசகர் என்றால் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே என்று ஏன் சொல்ல வேண்டும்? சரி உங்களது வலைப்பூவில் நீங்கள் பதிவர் நாங்கள் வாசகர் என்றால் ஒவ்வொருவரும் அவரவர் வலைப்பூவில் தான் பதிவரா? அப்ப நான் எனது வலைப்பூவை விட்டு வேறு இடம் சென்றால் பதிவர் இல்லையா? ஒரே குழப்பமா இருக்கே?????????
சரி நீங்கள் நிருபர் என்று பெயர் வைத்திருப்பதால் நாங்கள் வாசகர் என்றால் நீங்கள் பதிவர் இல்லையா? இல்லை ஒருவேளை நிருபர் பதிவர் என்று ஏதேனும் புதுப்பெயரா?
சரி நீங்கள் நிருபர் என்று பெயர் வைத்திருப்பதால் நாங்கள் வாசகர் என்றால் நீங்கள் பதிவர் இல்லையா? இல்லை ஒருவேளை நிருபர் பதிவர் என்று ஏதேனும் புதுப்பெயரா? அப்படியென்றால் நாங்கள் எல்லோரும் வாசகர் பதிவரா? யாராவது விளக்குங்கப்பா?
நிஜமா நல்லவன், மங்களூர் சிவா ஆகியோருக்கு எனது வணக்கங்கள்...!
தங்களது சந்தேகத்துக்கு பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
பத்திரிகை உலகைப் பொறுத்தவரை நாம் எழுதும் எழுத்துக்களை படிப்பவர்களை வாசகர்கள் என்கிறோம். டி.வி.க்களை பார்ப்பவர்களை நேயர்கள் என்கிறோம். மளிகைக் கடைக்கு தொடர்ந்து வருபவர்களை வாடிக்கையாளர் என்கிறோம். என்னைப் பொறுத்தவரை நிருபர் வலைப்பூவில் எழுதியுள்ள எழுத்துக்களை படிக்கும் அனைவருமே நிருபர் வலைப்பூவின் வாசகர்கள்தான்.
வாசகர்கள் என்பவர்கள் ஒரு பத்திரிகையின் விற்பனையை, வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடிய மதிப்பிற்குரியவர்கள். அதேபோலதான் எனது வலைப்பூவினை பார்க்க வரும் மற்ற வலைப்பதிவர்களை நான் மரியாதைக்குரியவர்களாக நினைக்கிறேன். எனது வாசகர் வட்டம் நாளுக்கு நாள் விரிந்து வருகிறது. இதற்கு காரணம் உங்களைப் போன்றவர்களும் அடிக்கடி வந்து செல்வதால்தான்.
சரி... நேராக விஷயத்துக்கு வருகிறேன். வாசகர் என்று போடுவதை தங்களைப் போன்ற வலைப்பதிவர்கள் தவறாக எடுப்பார்களேயானால்... இனி அந்த வார்த்தையை உபயோகப்படுத்தாமல் விட்டு விடுகிறேன். வாசகர்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக இனி நண்பர்களே...! என்று குறிப்பிடுகிறேன்.
பின்னூட்டமிட்டதற்கு நன்றி நண்பர்களே...!
நண்பர் சினிமா நிருபர் அவர்களுக்கு,
சீரியசான பின்னூட்டம் அல்ல அது. முதல் தடவை உங்க ப்ளாக் பக்கம் வந்ததால அப்படி ஒரு பின்னூட்டம். நீங்கள் உங்கள் விருப்பம் போல் அழைக்கலாம். நன்றிக்கு நன்றி.
நண்பர் சினிமா நிருபர் அவர்களுக்கு,
சீரியசான பின்னூட்டம் அல்ல அது. முதல் தடவை உங்க ப்ளாக் பக்கம் வந்ததால அப்படி ஒரு பின்னூட்டம். நீங்கள் உங்கள் விருப்பம் போல் அழைக்கலாம். நன்றிக்கு நன்றி.
மங்களூர் சிவா நிஜமாவே நல்லவரா?
//முரளிகண்ணன் said...
மங்களூர் சிவா நிஜமாவே நல்லவரா?//
மங்களூர் சிவா நிஜமா நல்லவன் தான். ஆனா நிஜமா நல்லவன் மங்களூர் சிவா கிடையாது:)
///முரளிகண்ணன் said...
மங்களூர் சிவா நிஜமாவே நல்லவரா?///
மங்களூர் சிவா நிஜமா நல்லவன் தான் ஆனா நிஜமா நல்லவன் மங்களூர் சிவா கிடையாது:)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!