CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-22

விஜய்க்கு வாழ்த்து சொல்லலாம் வாங்க..!


இளைய தளபதி விஜய் இன்று தனது 35வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுகிறார்.

தமிழ் திரைப்படங்களில் கடந்த 16 ஆண்டுகளாக நடித்து வரும் விஜய், இதுவரை 45 படங்களில் நடித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு விஜய்க்கு என்று அதிக அளவிலான ரசிகர் பட்டாளம் உருவாகியது. திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, கில்லி என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் அணிவகுத்து வந்தன. சமீபத்தில் வெளியான குருவியும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்து வரும் இளைய தளபதி இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

வழக்கத்தை விட இந்த ஆண்டு பிறந்த நாள் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கு காரணம் விஜய் ரசிகர் மன்ற கொடி அறிமுகப்படுத்துவதுதான். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் விழாவில் அகில இந்திய விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படுகிறது.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து சொல்ல விரும்பும் ரசிகர்கள், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

12 comments:

Samuthra Senthil said...

வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு : நீங்கள் எழுதும் பின்னூட்டம் இளைய தளபதி விஜய்யின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்...

Anonymous said...

அண்ணாச்சி பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறதோட

ஒரு சின்ன வேண்டுகோள் இனிமேலாவது தமிழ்மணத்துல சூடான ஈடுகையில வாற மாதிரி படங்கள் நடிக்காதிங்கன்னு கேட்டுக்கறேன்.

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்

//அண்ணாச்சி பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறதோட

ஒரு சின்ன வேண்டுகோள் இனிமேலாவது தமிழ்மணத்துல சூடான ஈடுகையில வாற மாதிரி படங்கள் நடிக்காதிங்கன்னு கேட்டுக்கறேன்// repeat

Anonymous said...

Happy Birthday VIJAY

Samuthra Senthil said...

வாசகர்கள் தங்களது சொந்த ஊரின் பெயரையோ... தற்போது இருக்கும் ஊரின் பெயரையோ குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Anonymous said...

வாழ்த்துக்கள் விஜய்......

FunScribbler said...

இளைய தளபதி விஜய்க்கு வாழ்த்துகள்!! இனி வர படங்களில் வித்தியாசமான நடிப்பை அள்ளி தாருங்கள்!!

கிரி said...

விஜய் க்கு பிறந்த வாழ்த்துக்கள்

எப்போதும் ஒரே மாதிரி நடிக்காமல், கொஞ்சமாவது வித்யாசம் காட்டவும்.

இவன் said...

வாழ்த்துக்கள் விஜய்....

இந்த பிறந்தநாளுக்கு பிறகாவது நல்ல படங்களில் "நடித்து" வெற்றி பெற வாழ்ழ்த்துக்கள்

//சமீபத்தில் வெளியான குருவியும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.//

இது கொஞ்சம் ஓவரா இல்ல??

இவன்
மெல்போர்ன்

Samuthra Senthil said...

நிருபர் வலைப்பூவில் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அனைத்து வாசகர்களுக்கும் நன்றி...!

vijayfans said...

verry verry happy birthday to you vijay

visit now now www.superstarvijay.blogspot.com

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!