CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-21

மாளவிகாவுக்கு செக்ஸ் டார்ச்சர் : பரபரப்பு புகார்


நடிகை மாளவிகாவுக்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவர் செக்ஸ் டார்ச்சர் செய்த செய்தி வெளியாகி தமிழ் திரையுலகையே பரபரப்பு உள்ளாக்கியுள்ளது.

உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இவர் மும்பையை சேர்ந்த சுமேஷ் என்ற தொழிலதிபரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் மாளவிகா தற்காலிகமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார்.

இந்நிலையில ஏற்கனவே ஒப்பந்தமான கார்த்தீகை என்ற படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் மாளவிகா சென்னை வந்தார். சென்னையில் படத்தின் தயாரிப்பாளரான ஆஞ்சநேயலு மாளவிகாவுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்ததாக கூறப்பட்டது. இதில் கோபமடைந்த மாளவிகா சூட்டிங்கில் பங்கேற்க முடியாது என்று சொல்லி விட்டு மும்பைக்கு பறந்து விட்டார்.

இந்த செய்தி நேற்று இரவு முதலே தமிழ் திரையுலகையே பரபரப்புக்கு உள்ளாக்கியது.

இந்த சம்பவம் குறித்து நடிகை மாளவிகாவிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டோம். முதலில் பேட்டியெல்லாம் வேண்டாம் என்று சொன்ன மாளவிகா, பின்னர் கண்ணீருடன் பேசத் தொடங்கினார்.

மனசாட்சியே இல்லாத மனிதர்கள். அந்த தயாரிப்பாளர் ஆஞ்நேயலு, நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்தும் படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும். தயவு செய்து வந்து நடித்து கொடுங்கள் என்றார். தவிர்க்க முடியாத காரணங்களால் நானும் சூட்டிங்கில் பங்கேற்பற்காக வந்தேன். வந்த இடத்தில்தான் அவர் என்னை டார்ச்சர் செய்தார். இதனை நான் கண்டித்தேன்.

இதனால் கோபமடைந்த அவர், ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு விட்டு போ... என்றார். அதற்கு நான், என்னால் ஆட முடியாது, கடினமான காட்சிகளில் நடிக்க முடியாது என்று கூறினேன். இதையடுத்து, நீ கர்ப்பமாக இருக்கிறாயா, எங்கே உன் வயிற்றை காட்டு... தொட்டுப் பார்க்கிறேன் என்று கூறி இன்னும் வெளியில் சொல்ல முடியாத வார்த்தைளால் கீழ்த்தரமாக பேசினார். அப்போது எனக்கு அழுகையாக வந்தது.

இவ்வாறு சொல்லிக்கொண்டே கண்ணீர் வடித்தார் மாளவிகா. இதையடுத்து அத்தோடு பேட்டியை முடித்துக் கொண்டு போன் இணைப்பை துண்டித்து விட்டோம்.

இந்த சம்பவம் குறித்து கார்த்தீகை படத்தின் டைரக்டர் வீராவிடம் பேச முயற்சித்தோம். நம்மிடம் அவர் சிக்கவில்லை. முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், படத்தை தொடங்கும்போது மாளவிகா கர்ப்பமாக இல்லை. இன்னும் 15 நாட்கள் அவர் நடித்து தரவேண்டும். அதற்காகத்தான் நேற்றுமுன்தினம் அவர் படப்பிடிப்புக்கு வந்தார். தயாரிப்பாளர் அவரிடம் முறை தவறி பேசியிருக்கிறார். அதற்காக நானே தயாரிப்பாளரை அழைத்துச் சென்று, மாளவிகாவிடம் மன்னிப்பு கேட்க வைத்தேன். இது குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் மாளவிகா புகார் தெரிவித்தார். நானும் நடந்ததை சரத்திடம் தெரிவித்தேன். அத்துடன் இப்பிரச்னை முடிந்துவிட்டது. ஆனால் மாளவிகா திடீரென மும்பை சென்றுவிட்டார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இப்படத்துக்கு ரூ. 4 கோடி செலவிடப்படுகிறது. மாளவிகாவால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள¢ளது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிப்போம், என்று கூறியுள்ளார்.

6 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!

வெங்க்கி said...

நிருபரே ! எனக்கு ஒரு சந்தேகம்.. இந்த அம்மா எப்போ பார்த்தாலும்.. பிரச்சினைகளிலேயே மாட்டிக்கிராங்களா இல்ல வெறும் விளம்பர ஸ்டண்ட் ஆ ? அடிக்கடி தன்னோட பேரு நியூஸ் ல அடி படணும் னுட்டு இப்படி எல்லாம் நடக்குதா ? இதுக்கு பதில் சொல்லுங்க..

உண்மையிலேயே இந்த மாதிரி நடந்திருந்தா அந்த தயாரிப்பாளர் ஒரு மிருகத்துக்கு சமானம்.. அப்படி இல்லேன்னா அந்த அம்மா ..#$%$@$@% (தூ...என்ன சொல்லுறதுன்னு தெரியல..)

பின் குறிப்பு : ஒரு ஜாலி தொடர் ஆரம்பிச்சிருக்கேன்.. வந்து attendance குடுத்துட்டு போங்க.. :))

கிரி said...

மாளவிகா கற்பமாக இருப்பது ஊருக்கே தெரியும், இதுல வயித்த தொட்டு பார்த்து தான் உறுதி செய்வாராமா?

எனக்கு வர்ற ஆத்திரத்துல (இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்) ..என்ன பண்ண போறேன்னு கேட்க போறீங்களா? நான் என்னங்க பண்ண போறேன். கம்முனு இருக்க வேண்டியது தான். இரண்டு சாபம் வேணா விடுறேன்.

Anonymous said...

//உண்மையிலேயே இந்த மாதிரி நடந்திருந்தா அந்த தயாரிப்பாளர் ஒரு மிருகத்துக்கு சமானம்.. //

:-((((((

Samuthra Senthil said...

//கீ - வென் said...

நிருபரே ! எனக்கு ஒரு சந்தேகம்.. இந்த அம்மா எப்போ பார்த்தாலும்.. பிரச்சினைகளிலேயே மாட்டிக்கிராங்களா இல்ல வெறும் விளம்பர ஸ்டண்ட் ஆ ? அடிக்கடி தன்னோட பேரு நியூஸ் ல அடி படணும் னுட்டு இப்படி எல்லாம் நடக்குதா ?//

யபாது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம்தானே கீ-வென்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

இந்த மாளவிகா சொல்லுவதெல்லாம் உண்மையா ?
என்னால் நம்ப முடியவில்லை
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!