2008-06-14
பிரபல தமிழ் நடிகருக்கு கோர்ட் பிடிவாரண்ட்
செக் மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஷ§க்கு கோர்ட் பிரிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதுவும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட். வில்லன் நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் மீது தெலுங்கு பட பைனான்சியர் ஜனார்தன் என்பவர் ராஜமுத்திரி கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். தன்னிடம் வாங்கிய ரூ.5 லட்சம் கடனை செக் மூலம் திருப்பி கொடுத்ததாகவும், அந்த செக் பவுன்ஸ் ஆகி விட்டதாகவும் வழக்கில் ஜனார்தன் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ராஜமுந்திரி கோர்ட், செக் மோசடியில் ஈடுபட்ட நடிகர் பிரகாஷ்ராஜை கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது. கோர்ட் உத்தரவை ஏற்று ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி கேட்பதற்காக பிரகாஷ் ராஜ் செல்லுக்கு தொடர்பு கொள்ள முயன்றோம். செல் சுவிட்ச் ஆப்.
நடிகர் பிரகாஷ் ராஜ், மனைவி லலிதா குமாரியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார், மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் விண்ணப்பித்திருக்கிறார், தெலுங்கு படங்களில் நடிக்க தடை போன்ற செய்திகளால் சமீப காலமாக தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது கொசுறு தகவல்.
Labels:
prakash raj
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அட என்ன நிருபர்... நடிகனுக்கு இதெல்லாம் புதுசா என்ன?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!