சினிமா டைரக்டர் ஒருவரது வீட்டில் டேரா போட்டு நடிகை ஒருவர் குடியாட்டம் போடும் செய்திதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு செய்தி.
ரஜினியின் மருமகனுக்கு சுள்ளான் என்று பெயர் வரக் காரணமாக இருந்தவர் அந்த ரமணமான இயக்குனர். அதே படத்தில் நாயகியாக நடித்த சிந்து நடிகை அதற்கு பிறகு வம்பு நடிகருடன் மன்மதமான படத்தில் நடித்து விட்டு கரை ஒதுங்கி விட்டார். நீண்டகாலத்துக்கு பிறகு சிந்து நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். இளைய தளபதியின் தந்தை இயக்கும் போட்டிக்கு மறுபெயர் படத்தின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததையடுத்து சென்னைக்கு வந்த சிந்துவுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார் ரமண இயக்குனர்.
ரமண இயக்குனருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இருந்தாலம் ரமணத்தின் வீட்டிலேயே டேரா போட்டு விட்டார் சிந்து. வெறும் டேராவாக மட்டும் இருந்தால்கூட சமாளித்துக் கொள்ளலாம்... இரவானால் குடியாட்டத்துடன் டேரா போடுவது டைரக்டரின் மனைவிக்கு பிடிக்காமல் போய்விட்டது. விருந்தும், மருந்தும் மூன்று நா¬ளைக்குத்தானே. இதனை நாசூக்காக சொல்லியும் சிந்து நடிகைக்கு புரியவில்லையாம். கணவரிடம் சொல்லியும் பலனில்லை. இதனால் நொந்து போன மனைவி, நடிகர் நடிகர் சங்க தலைவரிடம் முறையிட முடிவு செய்திருக்கிறாராம். எப்படியாவது அந்த நடிகையை என் வீட்டை விட்டு காலி செய்யச் சொன்னால் போதும் என்கிறார் மனைவி.
2008-07-23
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இந்த கிசுகிசு செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
sindhu dhulani?
Is it sullan director ramana and heroin sinthu dhulani?
பின்னூட்டத்துக்கு நன்றி SUTHA...!
நிருபரே, இதுக்கு நீங்க நேராவே சொல்லிடலாம்... :-)
கிசகிசு எழுதுறதே உமக்கு வேலையா போச்சா நிருபர்???
koduthu vaicha Ramana, vera enna solla? LOL
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!