2008-07-23
நமீதாவுக்கு முதல் கெட்டப்பெயர்
கால்ஷீட் சொதப்பலே இல்லாத நடிகைகளை பார்ப்பதே அரிது என்கிற சூழலில் நமீதா மட்டும் இதற்கு விதிவிலக்காக செயல்பட்டு வந்தார். ஆனால் அவருக்கும் அந்த கெட்டப்பெயர் வந்து விட்டது.
நடிகர் சரத்குமார் நடித்து வரும் 1977 என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நமீதாவும் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடும் பாடல் காட்சியன்றை சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் எடுக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக நமீதாவும் தேதி ஒதுக்கியிருந்தார். இதையடுத்து சூட்டிங் நாளில் 1977 படக்குழுவினர் மற்றும் நாயகன் சரத்குமார் உள்ளிட்டோர் ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு வந்தனர். நெடுநேரமாகியும் நமீதா வரவில்லை. என்ன ஏதுவென்று தெரியாமல் படக்குழுவினர் விழித்துக் கொண்டிருந்த நேரத்தில் நமீதாவிடம் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சூட்டிங்கில் பங்கேற்று ஆட முடியாது என்றும் கூறி விட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து நடிகைகளின் நலனில் அதிக அக்கறை(?) கொண்ட நடிகர் சரத்குமார், நடிகர் சங்க தலைவர் என்கிற முறையில் நமீதாவுக்கு ஒரு பொக்கே கொடுத்து அனுப்பினார். ஆனால் அந்த பொக்கேயை வாங்குவதற்கு நமீதா வீட்டில் இல்லை. அவர் ஒரு நிகழ்ச்சிக்காக ரிகர்சல் ஆட்டத்தில் பங்கேற்பதற்காக சென்று விட்டார் என்று வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இதையறிந்த சரத்குமார் நமீதாவுக்கு போன் செய்துள்ளார். போன் சுவிட்ச் ஆப். உச்ச டென்ஷனுக்கு சென்ற சரத்குமார், நமீதா மட்டும்தான் கால்ஷீட் சொதப்பாத நடிகை பட்டியலில் இருந்தார். இப்போ அவரும் கெட்டுப் போய்விட்டாரே என்று தனது சகாக்களிடம் புலம்பினாராம்.
Labels:
Namitha,
sarathkumar
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலாக கருத்துக்களை பின்னூட்டமிட்டு செல்லுங்கள் நண்பர்களே...!
//நடிகைகளின் நலனில் அதிக அக்கறை(?) கொண்ட நடிகர் சரத்குமார்//
:-))))))))
//உச்ச டென்ஷனுக்கு சென்ற சரத்குமார், நமீதா மட்டும்தான் கால்ஷீட் சொதப்பாத நடிகை பட்டியலில் இருந்தார். இப்போ அவரும் கெட்டுப் போய்விட்டாரே என்று தனது சகாக்களிடம் புலம்பினாராம்//
இது கால்ஷீட் சொதப்பியதால் வந்த டென்ஷன் ஆ இல்ல.... ஹி ஹி ஹி
Sarath must've been unhappy that she was sleeping with some1 else, instead of him, inspite of advance booking! LOL
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!