CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-02

மாளவிகா மிரட்டலுக்கு பயப்படமாட்டேன் : நமீதா தடாலடி


கார்த்தீகை படத்தில் எனக்கு பதிலாக யார் நடித்தாலும் அவர் மீது நான் வழக்கு போடுவேன் என்று நடிகை மாளவிகா அறிவித்ததற்கு NAMITHA தடாலடி பதில் அளித்துள்ளார்.

நடிகை மாளவிகா கார்த்தீகை என்ற படத்தில் நடித்து வந்தார். படத்தில் நடித்தபோதே மாளவிகாவுக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து அவர் கர்ப்பமானார். தற்போது 5 மாத கர்ப்பமாக இருப்பதால் நடிக்க முடியாது என்று கூறிய மாளவிகாவை, சரிகட்டி சூட்டிங்கில் பங்கேற்க அழைத்து வந்தனர். ஐதரபாத்தில் சூட்டிங் நடந்தபோது, கேரவனில் வைத்து கார்த்தீகை படத்தின் தயாரிப்பாளர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இனி அந்த படத்தில் நடிக்க முடியாது என்றும் புகார் கூறிவிட்டு மும்பைக்கு பறந்தார் மாளவிகா.

இதனைத்தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இருதரப்பினரிடமும் விசாரித்து சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் மாளவிகா முரண்டு பிடித்ததைத் தொடர்ந்து மாளவிகாவை நடிகர் சங்கம் கைகழுவி விட்டது. தயாரிப்பாளர் சங்கம் மாளவிகா மீது எடுக்கும் நடவடிக்கையில் தலையிட மாட்டோம் என்று நடிகர் சங்கம் அறிவித்து விட்டது.

இந்நிலையில் மாளவிகாவுக்கு பதிலாக நமீதாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. அதுபற்றி கூறிய மாளவிகா, எனக்கு பதிலாக யார் நடித்தாலும் அவர்கள் மீதும் கேஸ் போடுவேன் என்று கூறினார். இதற்கிடையில் நமீதா அதிக சம்பளம் கேட்பதாகவும், வேறு நடிகையை தேடுவதாகவும் செய்திகள் வெளியாயின. தற்போது கார்த்தீகை படத்தில் மாளவிகா நடித்த கேரக்டரில் நமீதா நடிப்பது உறுதியாகியுள்ளது. மாளவிகா மிரட்டல் குறித்து நமீதா கூறுகையில், யார் மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன். நான் கேட்கும் சம்பளத்தை கொடுத்தால் நடித்து கொடுப்பேன், என்றார். நமீதாவின் இந்த தடாலடி பதிலுக்கு மாளவிகா என்ன பதில் சொல்லப் போகிறாரோ தெரியவில்லை!

5 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

enna koduma nirubare ithu?

Anonymous said...

தலைவி நமீதாவை மிரட்டிய மாளவிகாவுக்கு எனது கண்டனங்கள்.

Samuthra Senthil said...

பின்னூட்டத்துக்கு நன்றி நெல்லை பித்தன்.

Anonymous said...

//மாளவிகா மிரட்டலுக்கு பயப்படமாட்டேன் : நமீதா தடாலடி//

:-))))

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!