Nayanthara in marma yoghi
உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் மர்மயோகி படத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் தேதி கேட்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.மர்மயோகி படத்தின் கதைக்கரு உள்ளிட்ட விஷயங்களை வெளிப்படையாக சொல்லி வரும் கமல்ஹாசன், நாயகி விஷயத்தை மட்டும் வெளியில் சொல்லமுடியாமல் இருக்கிறார். இதற்கு காரணம் தான் எதிர்பார்க்கும் நாயகிகள் யாரும் கால்ஷீட்டை உறுதிபடுத்தாததுதான். முதலில் ராணி முகர்ஜியிடம் கேட்டார். பின்னர் கஜோலிடம் கேட்டார். இவர்கள் இருவருமே தேதி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்களாம். இந்நிலையில் தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகையான நயன்தாராவிடம் நடிகர் கமல்ஹாசன் தேதி கேட்டிருக்கிறாராம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் நயன்தாராவும் உறுதியான பதில் சொல்லமல் இருப்பதுதான். தற்போது டாப் இடத்தில் இருக்கும் நயன்தாரா இப்போது இளம் முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் கால்ஷீட் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நயன்தாரா கமல்ஹாசனிடம் எனது தேதிகளை பார்த்துவிட்டு சொல்கிறேன் என்ற பதிலை மட்டும் சொல்லியிருக்கிறார். இதுபற்றி நயன்தாராவை தொடர்பு கொள்ள முயன்றோம். முடியவில்லை. ஆனால் கமல்ஹாசன் போனில் பேசியது உண்மை. நயன்தாராவிடம் இப்போது தேதிகள் எதுவும் இல்லை. அதனால் யோசித்து வருகிறார். மற்றபடி கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்பது நயன்தாராவின் நீண்ட நாள் ஆசை என்று அவரது அலுவலகத்தில் இருப்பவர்கள் தெரிவித்தனர்.
1 comments:
super nayanthara
nayanthara sangam palani
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!