2008-07-13
பாட்டு சண்டை இல்லாத சினிமா
ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் விஷயங்களில் ஒன்றான பாடல் இல்லாமல் ஒரு தமிழ்சினிமா உருவாகி வருகிறது.
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த கிரீடம் படத்தை இயக்கிய டைரக்டர் விஜய், பொய் சொல்லப்போறோம் என்ற பெயரில் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் சிறப்பு அம்சம் குறித்து விஜய் கூறியதாவது:
பொய்சொல்லப்போறோம் படத்தைப் பற்றிய உண்மையை சொல்லணும்னா, இது ஒரு வித்தியாசமான முயற்சி. படத்தில் பாடல்களே கிடையாது. சண்டைக்காட்சிகளும் இல்லை. ஆனால் காட்சிகளின் பின்னணியில் பாடல் வரிகள் இடம்பெறும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். பாட்டு, சண்டையில்லாமல் படம் எடுத்தால் எப்படி ஓடும்? என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். கண்டிப்பாக எனது இந்த வித்தியாசமான முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு விஜய் கூறினார்.
பொய் சொல்லப்போறோம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் கடந்த இரு தினங்களுக் முன்பு நடந்தது. இந்த விழாவில் நடிகர்ஷாம், மவுலி, நாசர், கார்த்திக் குமார், ராஜேஷ், எடிட்டர் மோகன், தயாரிப்பாரள் ஏ.எம்.ரத்னம், பாடலாசிரியர் முத்துக்குமார், நடிகைகள் சரன்யா, ப்ரீத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள் குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!
This movie is a remake(if legal) from a hindi movie called "Khosla Ka Ghosla" which had Anupam Kher, Boman Iran did the main roles. Nice movie and quite an entertaining one too....
//இது ஒரு வித்தியாசமான முயற்சி//
எல்லோரும் இதையே சொல்லுறாங்க
//பாட்டு, சண்டையில்லாமல் படம் எடுத்தால் எப்படி ஓடும்? என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். கண்டிப்பாக எனது இந்த வித்தியாசமான முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்.//
நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!