Super star rajinikanth in kuselan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் குசேலன் படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கர்நாடக ரக்ஷண வேதிகே அசைப்பு போர்க்கொடி தூக்கி போராட்டத்தில் குதித்துள்ளது. குசேலன் திரையிடும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஒகேனக்கல் விவகாரத்தில் ரஜினிகாந்த் கன்னடர்களுக்கு எதிராக பேசியமைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான் வேதிகே அமைப்பினரின் கோரிக்கை. குசேலனுக்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையிலும் கர்நாடகாவில் குசேலன் திரையிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படம் திரையிட தடை இல்லை என்று கன்னட பிலிம்சேம்பர் அறிவித்தது. இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்தும், கன்னட பிலிம் சேம்பருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட. ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.
நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
இவ்வாறு ரஜினிகாந்த் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலா மற்றும் துணைத்தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.
ரஜினிகாந்த் தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறாரே தவிர, வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் குசேலனுக்கு தடையில்லை என்றதும் கர்நாடகாவில் வாழும் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள். பெங்களூருவில் குசேலன் 17 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல தெலுங்கு குசேலன் படமான குசேலடுவும் கணிசமான தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கிறது.
6 comments:
ரஜினிகாந்தின் கடிதம் குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..
Tamil cinema industry cannot help in Kuselan matter. But, every time TAMIL blood circulated tamil cinema actress blames only Rajinikanth in Kavery and Karnataka issue.
If any problem come to Rajiji they cannot help to him.
Think about this.
Tamil film Industry and Tamil blood circulated Tamil actors cannot help in Kushalen matter to Rajini. Even rajiji speeches are 100% better than Tamil actors.
Then wyh are they blamme rajiji in cauvery and Huganakal matter?
I think they blames Rajinis papaularity.
That is Rajiji
//இதுபோல தெலுங்கு குசேலன் படமான குசேலடுவும் கணிசமான தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கிறது.//
நிருபர் தெலுங்கில் "கதாநாயகடு" பேரு மாத்திட்டாங்க
என்ன பிரச்சனை என்றாலும் ரஜினியை போட்டு காய்ச்சுவது இவனுகளுக்கு வேலையாக போய் விட்டது.
ரஜினி தமிழனுக்கு ஆதரவா பேசுனா கர்நாடகா காரன் அடிக்கிறான், கர்நாடாக காரனுக்கு ஆதரவா பேசுனா தமிழன் திட்டுறான், எதுவும் பேசாம இருந்தா ..எதுவுமே பேசாம வாய மூடிட்டு இருக்கானு திட்டறாங்க..
ம்ம்ஹீம்
ரஜினி தமிழனுக்கு ஆதரவா பேசுனா கர்நாடகா காரன் அடிக்கிறான், கர்நாடாக காரனுக்கு ஆதரவா பேசுனா தமிழன் திட்டுறான், எதுவும் பேசாம இருந்தா ..எதுவுமே பேசாம வாய மூடிட்டு இருக்கானு திட்டறாங்க..
உண்மைதான், பத்திரிக்கைகளின் பங்கு இதில் அதிகம்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!