2008-07-15
பிலிம்பேர் விருது பெற்றவர்களும், வாழத்துகளும்
ஐம்பத்தி ஐந்தாவது பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் சிறந்த படமாக பருத்தி வீரன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற மற்ற நட்சத்திரங்கள் விவரம் வருமாறு:-
சிறந்த இயக்குனர் : அமீர் (பருத்திவீரன்)
சிறந்த நடிகர் : கார்த்தி (பருத்திவீரன்)
சிறந்த நடிகை : ப்ரியாமணி (பருத்திவீரன்)
சிறந்த குணச்சிந்திர நடிகை : சுஜாதா (பருத்திவீரன்)
சிறந்த குணச்சித்திர நடிகர் : சரவணன் (பருத்திவீரன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : கே.டி.ஆனந்த் (சிவாஜி)
சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (சிவாஜி)
சிறந்த பாடலாசிரியர் : பா.விஜய் (உன்னாலே உன்னாலே)
சிறந்த பாடகர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (மொழி)
சிறந்த பாடகி : சாதனா சர்க்கம் (கிரீடம்)
வாழ்நாள் சாதனையாளர்கள் : நடிகர் சிவகுமார், நடிகை ஜெயப்பிரதா
பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நடிகர் & நடிகைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. நடிகைகள் பூனம் பஜ்வா, ரம்பா, திவ்யா, ஹன்சிகா மோத்வானி, ஷோபனா, நமீதா, ஸ்ரேயா நடிகர்கள் ராஜா, வினித் உள்ளிட்டோரின் ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடந்தது. டான்ஸ் மாஸ்டர் கலாவின் கலைகுழுவினரும் அவர்களுடன் இணைந்து ஆடினர்.
பிலிம்பேர் விருது பெற்ற நட்சத்திரங்களை நிருபர் வலைப்பூ சார்பாகவும், விரைவில் வெளியாகவுள்ள சினிமாநிருபர் டாட் காம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.
Labels:
filmfare
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நீங்களும் வாழ்த்துங்களேன் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!