2008-07-13
நமீதாவுக்கு இமெயிலில் காதல் கடிதம்
நடிகை நமீதாவுக்கு இமெயிலில் பல காதல் கடிதங்கள் வருகின்றனவாம்.
தமிழ்சினிமா உலகின் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் நடிகை நமீதா. குத்துப்பாட்டு ஆனாலும் சரி.. குடும்ப கேரக்டர் ஆனாலும் சரி... கும்மியெடுத்து வரும் நமீதாவுக்கு ரசிகர்களும் அதிகம். ரசிகர்களில் சிலர் நமீதாவின் இமெயிலுக்கு காதல் கடிதங்களை அனுப்புகிறார்களாம். இதுபற்றி நமீதா கூறுகையில், எனக்கு வரும் காதல் கடிதங்களை அவ்வப்போது படித்து பொழுதுபோக்குவேன். பலருக்கு காதல் வேண்டாம் அண்ணா என்று பதில் அனுப்பியிருக்கிறேன். ஒரு சிலர் ஆங்கிலத்தில் கவிதை நடையில் காதல் கடிதம் எழுதுவார்கள். சிலர் என்னை வர்ணித்து எழுதுவார்கள். இது படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும், என்றார்.
சரி... கல்யாணம் எப்போ மேடம் என்று நமீதாவிடம் கேட்டால்... அதுவாங்களாண்ணா... இப்போதைக்கு வேண்டாம்னு நினைச்சிருக்கேண்ணா என்கிறார்.
Labels:
Namitha
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நிருபர் வலைப்பூவின் புதிய வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!