CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-11

படிக்காதவன் சூட்டிங் நிறுத்தம்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட தலைப்பான படிக்காதவன் என்ற தலைப்பில் நடிகர் Danush நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ§க்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கிறார். கடந்த 2 மாதத்துக்கும் மேலாக படிக்காதவன் பட சூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடந்து வந்தது. படத்துக்கு தேவையான இடங்களை செட் போட்டு படமாக்கினார்கள்.

இதில் ரயில் நிலையத்தில் சண்டை நடப்பது போன்ற காட்யும் அடங்கும். இதனால் சென்னை எழும்பூர் அல்லது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து சூட்டிங்கை நடத்த திட்டமிட்டனர். இதற்காக தெற்குரயில்வேயிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ரயில்வே நிர்வாகம் இன்னமும் அனுமதி வழங்கவில்லை. இதனால் கடந்த 10 நாட்களாக படிக்காதவன் பட சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கினால்தான் படிக்காதவன் படம் சூட்டிங் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனுஷ் தனது அடுத்த படம் குறித்த டிஷ்கஷனில் இறங்கி விட்டார் என்பது கொசுறு தகவல்.

1 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!