2008-07-01
இளமையின் ரகசியம் : குசேலன் விழாவில் ரஜினி தகவல்
குசேலன் படத்தில் ரஜினியின் ஸ்டில்களை பார்த்த பலருக்கும் ஒரு ஆச்சர்யம் இருந்திருக்கும். எப்படி இவர் இவ்வளவு இளமையாக தெரிகிறார் என்று...! அந்த ஆச்சர்யத்துக்கு பதில் அளிக்கும் வகையில் குசேலன் விழாவில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
சென்னை லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் குசேலன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் கே.பாலசந்தர், ரஜினிகாந்த், நயன்தாரா, பி.வாசு, ஏஆர்.ரஹ்மான், பாரதிராஜா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கம்போல தனது இயல்பான பேச்சுக்களை அவரது ஸ்டைலில் உதிர்த்தார். அவர் பேசியதாவது:&
குசேலன் பட ஸ்டில்கள பாத்து எல்லாரும் என்கிட்ட ஆச்சர்யமா கேட்டாங்க. எப்படி ரஜினிகாந்த் நீங்க இவ்வளவு இளமயாவே இருக்கீங்கனு கேட்டாங்க. நான் சொன்னேன். சூட்டிங்குல... யூனிட்டுல இருந்த எல்லாரும் என்ன அன்போட பாத்துக்கிட்டாங்கன்னு சொன்னேன். பாலசந்தர் சார், ரஜினி சந்தோசமா இருக்கானா, நிம்மதியா இருக்கானான்னு பாத்துக்கிட்டார்.
இளமயா இருக்குறதுக்கு இமயமலைக்கு போக வேண்டாம். வேர் பிடுங்கி சாப்பிடவும் வேண்டாம். சாப்பாட்டுல 4 வெள்ளையான விசயங்களை நான் சேர்த்துக்கிறதில்ல. உப்பு, சர்க்கரை, மாத்திரை, அரிசி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பால், நெய் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். இதெல்லாம் நம்ம ஒடம்புக்கு. மனசுக்கு இல்ல. மனசுக்கு நல்ல சிந்தனைதான் மருந்து. என்னிடம் நல்ல எண்ணம் இருக்கு. அதனால நல்லா இருக்கேன். என்னை சேர்ந்தவங்களும் நல்லா இருப்பாங்க.
குசேலன் படத்துக்கு இசையமைக்க முதல்ல இளையராஜாவைத்தான் போ£டலாம்னு யோசிச்சோம். ஒருநாள் வெயில் படத்தோட இசையை கேட்டேன். ரொம்ப பிடிச்சிது. ஷங்கரிடம் இசையமைப்பாளர் பற்றி விசாரிச்சேன். யாரு இந்த பாட்டுக்கு இசையமைச்சதுன்னு கேட்டேன். அதுக்கு பிறகுதான் ஜி.வி.பிரகாஷை போட்டோம். ரொம்ப திறமையான பையன். நிச்சயம் நல்லா வருவான். ஏஆர்.ரஹ்மானோட திறம அப்படியே இவர்கிட்டயும் இருக்கு.
குசேலன் படம் நல்லா வந்திருக்கு. இந்த படம் என் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நம்புறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
விழாவில் கே.பாலசந்தர் பேசுகையில், இது ஒரு சூப்பர் ஸ்டார் கதை. இதில் ரஜினியைத் தவிர வேறு யார் நடிக்க முடியும்? இந்த படத்தின் சூட்டிங்கை 85 நாளில் வாசு முடித்துள்ளார். சந்திரமுகி போல குசேலன் படமும் சாதனை படைக்கும். தெய்வமே குருவாக தட்சிணா மூர்த்தியாக வந்ததை கேட்டிருக்கிறோம். ஆனால் எனக்கு சிஷ்யனாக வந்திருப்பதில் பெருமையடைகிறேன்.
விழாவின்போது குசேலன் படத்தில் பணியாறிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளத்தில் இருந்து ரூ.15 லட்சம் அன்பளிப்பாக வழங்கினார்.
Labels:
Kuselan,
rajinikanth
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...!
தலைவர் செய்தி பட்டய கிளப்புது :-))
//என்னிடம் நல்ல எண்ணம் இருக்கு. அதனால நல்லா இருக்கேன். என்னை சேர்ந்தவங்களும் நல்லா இருப்பாங்க.
//
தலைவர் நல்லா இருந்தா நாங்களும் நல்லா இருப்போம்.
ரஜினி ரகசியத்தை சொல்லிட்டார். ஆனா யாரும் அத கடைபிடக்கத்தான் மாட்டாங்களே...
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!