CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-15

இது சினிமா செய்தி இல்லை... ஆனா கண்டிப்பா படிங்க...!

நிருபர் வலைப்பூவில் சினிமா நிருபர் என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி சினிமா செய்திகளை எழுதத் தொடங்கினேன். இன்று வரை மொத்தம் 267 பதிவுகளை பதித்துள்ளேன். பல பணிகளுக்கு இடையே இதையும் ஒரு முக்கிய பணியாக கருதி நான் எழுதிய எழுத்துக்களை இன்றோடு 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் சுமார் 71 ஆயிரம் பக்கங்களை பார்த்து படித்துவிட்டு சென்றிருக்கிறார்கள் (ஆதாரம்: ஹிஸ்டேட்ஸ் டாட் காம்) என்று நினைக்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது.

எனது எழுத்துக்கள் இத்தனைபேரை சென்றிருக்கிறது... அதுவும் குறுகிய காலத்தில் சென்றிருப்பதை நினைத்து பெருமிதம் கொள்ளும் அதே நேரத்தில் நான் வலைப்பூ தொடங்கவும், நிருபர் வலைப்பூ வளர்ச்சிக்கும் உதவிய நண்பர்கள் சிலரைப் பற்றி மீண்டுமொருமுறை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ்மணம் எனக்கு கடந்த சில ஆண்டுகளாக அறிமுகம். ஆனால் ஒருபொழுதும் வலைப்பூ தொடங்கி அதில் எழுத வேண்டும் என்று நினைத்ததில்லை. இட்லிவடை, பைத்தியக்காரன், மதுரை மச்சான் போன்ற பல பெயர்களை படிக்கும்போதே சிரிப்பு வரும். உள்ளே சென்று தமிழில் படிப்பதில் இன்னொரு ஆனந்தம். அதன் பின்னர்தான் நாமும் வலைப்பூ தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நிருபர் என்ற பெயரில் பிளாக்கில் பட்டா போட்டேன். பட்டாதான் போட்டேனே தவிர அதில் எப்படி உழுது பயிரை விளைவிக்க வேண்டும் என்பது தெரியவில்லை. அந்த நேரத்தில் எனது நண்பரும், பொறியாளருமான கதிரவன் (ஆசாரிபள்ளம், நாகர்கோவில்), செய்திகளை பதிவிடுவது பற்றி சொல்லித் தந்தார். தமிழ்மணத்திலும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார். கதிரவனுக்கு என்னுடைய முதல் நன்றி. தமிழ்மணத்தில் எனது வலைப்பூ ஏற்கப்பட்டதா, இல்லையா? என்று தெரிந்து கொள்வதற்குள்ளாகவே என்னுடைய எழுத்து ஆர்வம் குன்றி விட்டது. அப்படியே விட்டு விட்டேன்.

அதன் பின்னர் சில மாதங்களுக்கு பிறகு நெல்லைதமிழ் இணையத்தின் ஆசிரியர் மோகன்ராஜ் ஈ&மெயில் மூலர் அறிமுகமானார். அவர்தான் எனக்கு தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகள் பற்றி என்னிடம் தெரிவித்தார். நெல்லைநியூஸ் என்ற வலைப்பூ மூலம் நெல்லைதமிழ் இணையத்துக்கு நிறையபேர் வந்திருக்கிறார்கள் என்று சொன்னார். மீண்டும் எனக்குள் எழுத்து ஆர்வம் பற்றிக் கொண்டது. செய்திகளை பதிவிடத்தொடங்கினேன். என்னை வலைப்பதிவராக்கியதில் அவருக்கும் பங்கு இருக்கிறது. அவருக்கு எனது நன்றிகள்.

அடுத்ததாக எனக்கு வலைப்பதிவுலகில் அறிமுகமான முதல் வலைபதிவர் நண்பர் கிரி. அவர் எனது பதிவுகளை தினமும் படிப்பதுடன் தவறாமல் கருத்தும் சொன்னார். அவருக்கும் நன்றி சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அவரைத் தொடர்ந்து முரளிகண்ணன், இவன், சுதா, அருவை பாஸ்கர், கோவி.கண்ணன் என பல வலைபதிவர்களும் அவ்வப்போது வந்து கருத்து சொல்லி என்னை ஊக்குவிக்கிறார்கள். (பெயர்கள் விடுபட்டிருப்பின் என்னை மன்னிக்கவும் நண்பர்களே..!) அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வலைப்பூவை அதிக எண்ணிக்கையிலான வாசகர்கள் நுகரத் தொடங்கியதும், எனது நண்பர்கள் சிலர் (அவர்கள் வெவ்வேறு பத்திரிகைகளில் சினிமா நிருபராகவும், போட்டோகிராபர்களாகவும் பணியாற்றி வருவதால் அவர்களது பெயர்களை வெளியிட இயலவில்லை) செய்தி, படங்கள் கொடுக்க முன்வந்தனர். வாசர்களுக்கு அதிக செய்திகள் கொடுக்கும் வகையில் நமக்கென ஒரு வலைதளம் தொடங்க வேண்டும் என்று அந்த நண்பர்கள்தான் என்னை ஊக்குவித்து வருகிறார்கள். அவர்களுக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.

அதேநேரத்தில் சிந்தாநதி, திரட்டி வெங்கடேஷ் உள்ளிட்டவர்கள் தனிமடலில் எனக்கு கருத்துக்களை அனுப்பி ஊக்குவித்தார்கள். திரட்டி டாட் காம் வெங்கடேஷ் அவர்கள் திரட்டியில் சினிமா என்ற பகுதியில் கீழே நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் அத்தனை செய்திகளையும் இடம்பெறச் செய்து நிருபர் வலைப்பூவுக்கு சிறப்பு தேடித் தந்துள்ளார். அவருக்கு எமது ஸ்பெஷல் நன்றிகள். தமிழ்மணம், திரட்டி, தமிழ்கணிமை போன்ற திரட்டிகளின் வாயிலாக எனது வலைப்பூவுக்கு வாசகர்கள் வருகிறார்கள். (தேன்கூட்டில் மட்டும் நிருபரால் நுழைய முடியவில்லை. பலதடவைமுயற்சித்தும் தோல்விதான் மிஞ்சுகிறது. இருந்தாலும் தொடர்ந்து முயலுகிறேன்)

10 ஆயிரம் பேர்: இது சாதனையா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டபோது ஏராளமான நண்பர்கள் பின்னூட்டமிட்டு வாழ்த்தினார்கள். அன்றைய தேதி நிலவரப்படி தினமும் குறைந்தது 100 வாசகர்களாவது எமது பதிவை பார்வையிட்டு சென்றார்கள். இன்று தினமும் 100 பேராவது நேரடியாக (புக்மார்க்கில் இருந்து) எமது பதிவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம் ஹிஸ்டாட்ஸ் டாட் காம்). இந்த வளர்ச்சிக்கு காரணம் நான் நல்ல முறையில் செய்தி கொடுத்து வருகிறேன் என்பதுதான் என்பது என்னுடைய கருத்து.

விரைவில் வெளிவரவுள்ள சினிமாநிருபர் டாட் காமில் இதைவிட பல மடங்கு அதிக செய்திகள், கவர்ச்சி படங்கள், கிசுகிசுக்கள் என பல சிறப்பம்சங்கள் இடம்பெறவிருக்கின்றன. வாசகர்கள் தொடர்ந்து வருகை தந்து செய்திகளை படித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

5 comments:

Samuthra Senthil said...

நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே..!

Anonymous said...

valthugal nirubar.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

நன்றிக்கு நன்றி நிருபரே !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

முரளிகண்ணன் said...

அன்பு நிருபரே
உங்கள் இணையதளத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த வலைப்பதிவு போலவே நடுநிலை செய்திகள் வெளியிட்டால் உங்கள் தளத்தின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்

கிரி said...

நிருபர் அடித்து ஆட என மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவை திறக்கும் போது மெதுவாக திறக்கிறது, இதை சரி செய்தால் இன்னும் பல பக்கங்கள் வாசகர்களால் படிக்கப்படும்.

நாகரீகமான எழுத்துக்களால் இன்னும் பல வாசகர்களை பெற என் வாழ்த்துக்கள்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!