2008-07-20
காமெடி கருணாஸின் சீரியஸ் கருணை
காமெடி நடிகர் கருணாஸ் 100 ஏக்கர் நிலத்தில் முதியோர் இல்லம் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார்.
ஆசியாவிலேயே மிகப்பெரியதாக கட்டப்படும் இந்த முதியோர் இல்லம் குறித்து கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
எனக்கு சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நிறைய நற்பணிகளை செய்திருக்கிறேன். இதனை சொல்லிக் காட்டுவது தவறுதான். ஆனாலும் இப்போது செய்யவிருக்கும் நல்ல காரியம் மக்களுக்கு சென்றடைய வேண்டும். இதன் மூலம் ஏராளமானவர்கள் நான் செய்யும் நற்காரியத்தால் பயனடைய வேண்டும் என்பதால் சொல்கிறேன்.
எனது சிறுவயது ஆசையை நிறைவேற்றும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலத்தில் முதியோர் இல்லம் கட்டுகிறேன். அதற்கான நிலத்தை வாங்குவதற்கு சமீபத்தில் அட்வான்ஸ் கொடுத்தேன். ஆசியாவிலேயே இது மிகப் பெரிய முதியோர் இல்லமாக இதனை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். எனது இந்த முயற்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கை கொடுக்க முன்வந்திருக்கிறார். அவர் ரூ.50 ஆயிரம் நன்கொடை அளிப்பதாக கூறியிருக்கிறார். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு கருணாஸ் கூறினார்.
Labels:
karunas
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Yugs, daw nabasahan ko naman ni sa iban nga blog?
திரு.கருணாஸ் அவர்களின் இந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும் நிருபரே?
வாழ்த்துக்கள். 100 ஏக்கர் நிலம் என்பது மிக பெரிய ஒன்று தான்.. ஆனால் இதை எப்படி சமாளிக்க போகிறார் என்பது எனக்கு மிக ஆச்சர்யமாக உள்ளது. கடவுள் துணை இருப்பார் என்று நம்புகிறேன்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!