CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-12

நயனுடன் காதல் வந்தால் துணிச்சலாக சொல்வேன் : விஷால் அதிரடி



நடிகை நயன்தாராவுடன் எனக்கு காதல் இல்லை. அப்படி காதல் வந்தால் துணிச்சலாக சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை என்று அதிரடியாக சொல்லியிருக்கிறார் நடிகர் விஷால்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா மேம்லாலம் அருகே இருக்கும் தி பார்க் ஓட்டலில் விஷால், நயன்தாரா, த்ரிஷா, சிலம்பரசன் ஆகியோர் ஒரு பார்ட்டியில் பங்கேற்றனர். இதையடுத்து நயன்தாராவுடன் சிம்பு மீண்டும் காதல் என்று செய்திகள் வெளியாயின. இதனை நயன்தாரா மறுத்தார். தற்செயலாக நடந்த சந்திப்பை தவறாக நினைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து காதல் வதந்தி விஷால் பக்கம் திரும்பியது. நடிகர் விஷாலும் நயன்தாராவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாயின.

இதனை நடிகர் விஷால் அதிரடியாக மறுத்துள்ளார். இதுபற்றி விஷால் கூறியதாவது:

எனக்கும், நயன்தாராவுக்கும் காதல் எதுவும் இல்லை. அப்படியரு செய்தியை பத்திரிகைகளில் படிக்கும்போது சிரிப்பும், ஆத்திரமும்தான் வருகிறது. நான் நயன்தாராவிடம் அந்த நோக்கத்தில் பழகவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நட்பு ரீதியாகத்தான் அன்றையதினம் பார்ட்டிக்கு சென்றேன். இதுமாதிரியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி காதலித்தால் துணிச்சலோடு வெளிப்படையாக சொல்வேன். என் காதலை நான் மூடி மறைக்க மாட்டேன்.

இவ்வாறு விஷால் கூறினார்.

3 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

News athiradiya illaye?

Ganeshkumar said...

நிஜத்திலும் விஷால் ஹீரோதானா?

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!