CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-30

பெட்டில் இருந்து தவறி விழுந்து காலை உடைத்துக் கொண்ட நடிகை

நடிகை நிக்கோல் பெட்டில் இருந்து தவறி விழுந்து காலை உடைத்துக் கொண்டார். இதில் சதி நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Actress Nicole in adada enna alazhu movie
நடிகை நிக்கோல் தற்போது ஜெய் ஆகாஷ¨டன் அடடா என்ன அழகு என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இவர் ஜெய் ஆகாஷ் அநாகரிகமாக பேசுவதாக புகார்கூறி விட்டு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப் ஆனார். இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் நிக்கோல். ஜெய் ஆகாஷ¨டன் ஏற்பட்ட மோதலில் சமாதானம் ஆன நிக்கோல், தற்போது ஊட்டியில் நடக்கும் அடடா என்ன அழகு சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். படத்தின் கதைப்படி நடிகை நிக்கோல் மருத்துவமனையன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அப்போது எதிர்பாராத விதமாக பெட்டில் இருந்து தவறி விழுவார். பொதுவாக இப்படிப்பட்ட காட்சி எடுக்கும்போது தரையில் ஒரு மெகா சைஸ் பெட் போட்டிருப்பார்கள். இந்த சூட்டிங்கிலும் பெட் போடப்பட்டிருந்ததாம். ஆனால் நிக்கோல் விழுவது போன்ற காட்சியை எடுத்தபோது பெட் மாயமிகி விட்டதாம். இதனால் பெட்டில் இருந்து கீழே விழுந்த நிக்கோலின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில்சதி இருக்கிறது, அது யார் செய்த சதி என்று எனக்கு தெரியும் என்று சகட்டு மேனிக்கு ஜெய் ஆகாஷை சாடை மாடையாக திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறாராம் நிக்கோல்.

2 comments:

Samuthra Senthil said...

இந்த செய்த குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!

நல்லதந்தி said...

படுக்கையன்னாவே பிரச்சனை.அதிலும் நடிகையோட படுக்கையன்னா பல பிரச்சனை! :)~~~

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!