2008-07-01
சர்ச்சைக்காக தேர்ந்தேடுக்கப்பட்ட புதுப்பட பெயர்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் பிரச்னைகளில் ஒன்ற படத்தின் தலைப்பு. இந்த வரிசையில் சர்ச்சைக்காகவே ஒரு படத்துக்கு பெயரிட்டுள்ளனர். டைரக்ர் வெங்கடேஷ் தற்போது அர்ஜூன் நடிப்பில் துரை படத்தை எடுத்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அவர் எடுக்கவுள்ள படத்துக்கு வாடா என்ற தலைப்பை பதிவு செய்துள்ளார். இந்த தலைப்புக்கு கீழே பேஸ் டூ பேஸ் என்று சப் டைட்டிலும் போட முடிவு செய்துள்ளனர்.
இந்த தலைப்பு வாடா என்று மரியாதைக் குறைவாக இருக்கிறது என்று திரையுலகை சேர்ந்தவர்கள் சிலர் டைரக்டர் வெங்கடேஷிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரோ... சர்ச்சை வந்தால் பார்த்துக் கொள்ளலாம். படத்துக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்று கூறி தலைப்பை மாற்ற மறுத்து விட்டாராம்.
ஏற்கனவே நடிகர் சிம்பு நடிக்கும் படத்துக்கு போடா போடி என்று வைத்து விட்டு, திரு போடா, திருமதி போடி என்று மாற்றி வைத்துள்ளனர் என்பது குறிப்பபிடத்தக்கது. இதற்கு முன்பு டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா தனது படத்துக்கு பி எப் (பெஸ்ட் பிரண்ட்) என்று வைத்து விட்டு பெரும் சர்ச்சை கிளம்பியதைத் தொடர்ந்து அ ஆ என்று மாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
Labels:
sunderc
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களை தெரிவித்துவிட்டு செல்லுங்கள் நண்பர்களே...!
இவங்க ரவுசு தான் முடியல..
தமிழ்ல இருக்கிற மொக்கை பேரா பார்த்து வைக்கிறாங்க
இவனுங்களுக்கு வேற வேலயே இல்லாய நிருபர்?...
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!