2008-07-24
Kisu kisu சூப்பரின் தலையீட்டால் கடத்தல் நடிகை தடை நீங்கியது
சூப்பர் நடிகை, கிளாமர் நடிகை, குத்தாட்ட நடிகை, ஐட்டம் நடிகை என்று நடிகைகளுக்கு பெயர் வைப்பதுபோல இந்த நடிகைக்கு கடத்தல் நடிகை என்ற பெயர் நிலைத்து விடும் போலிருக்கிறது. அந்த புளோரமான நடிகை அமெரிக்காவுக்கு பெண்களை கடத்தி செல்வதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர். குற்ற வழக்கில் சிக்கியதால் புளோரத்துக்கு நடிகர் சங்கம் தடை விதித்தது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் புளோரம் வழக்கு தொடர்ந்து பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றார். அவர் பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றாரே தவிர கடத்தல் நடிகை என்ற பெயரை யாரும் திரும்பப் பெறவில்லை. இன்று வரை அவரை அந்த பெயரை வைத்துதான் கோலிவுட்காரர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.
இந்நிலையில் புளோர நடிகைக்கு, சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டாராகவே நடித்துள்ள படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து இரு படங்களில் குத்தாட்ட வாய்ப்பை பெற்ற புளோரம், சூப்பர் நடிகரிடம், தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். (நடிகர் சங்க சட்டதிட்டத்தின்படி தடை விதிக்கப்பட்ட நடிகர்& நடிகைகள் படங்களில் நடிக்கலாம். ஆனா£ல் அந்த படத்தை திரையிட முடியாது). சூப்பர் நடிகரின் படம் ரீலிசுக்காக காத்திருக்கும் நிலையில் தடைடய நீக்கும் விவகாரத்தில் தலையிட்டார். சூப்பரே தலையிட்டதால் பிரச்னை சுமூகமாக முடிந்து விட்டது. தடை நீங்கிய சந்தோஷத்தில் அடுத்த குத்தாட்டத்துக்கு தயாராகி வருகிறார் புளோர நடிகை.
Labels:
kisu kisu
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
//அவர் பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றாரே தவிர கடத்தல் நடிகை என்ற பெயரை யாரும் திரும்பப் பெறவில்லை//
ஹா ஹா ஹா ஹா
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!